நீங்கள் தினமும் காஃபி குடிப்பவரா? இதைப் படியுங்கள்!

Date:

உலகில் பலரால் மாற்றிக்கொள்ள இயலாத பழக்கம் என்றால் அது அதிகாலை காப்பியாகத்தான் இருக்கும். அன்றைய நாள் கோப்பையின் ஆவியிலிருந்து புறப்படுவதையே நம்மில் பலரும் விரும்புகிறோம். ஒரு நாளைக்கு நான்கு கோப்பைகளுக்கு மேல் கவிழ்க்கும் மகா நல்லவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். மாறிவரும் உணவுப் பழக்கம் வேறு பல இன்னல்களை நமக்கு விளைவிக்கிறது. சரி, இந்த காப்பி உடலுக்கு நல்லதா? என்ற கேள்வியை தீவிரமாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் “தொப்” என்று குதித்திருக்கிறார்கள் அமெரிக்க ஆராச்சியாளர்கள்.

coffee-mug-
Credit: Men’s Health

காப்பியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

ஆய்வு

ஆய்வு பல சுவாரஸ்யங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. காப்பி குடிப்பவர்கள் மற்றும் குடிக்காதவர்கள் என இரு அணியினை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். மொத்தம் 20,000 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டார்கள். அதில் காப்பி அருந்துபவர்கள் நீண்ட நாட்கள் நலமுடன் இருப்பார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிக்காதவர்களை விட 63 சதவிகிதம் உடல் வலிமையை பெருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

45 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் காப்பி குடிப்பதன் மூலம் ஆரோக்கியமான உடலினைப்பெற முடியும். இரண்டாம் நிலை சர்க்கரை வியாதி, அல்சைமர் என்னும் மறதி நோய், பெருங்குடல் கேன்சர் மற்றும் தோல் கேன்சர் ஆகியவை காப்பி குடிப்பவர்களுக்கு வருவதில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புத்துணர்ச்சி

ஆண்டிஆக்சிடென்டுகள் எனப்படும் புத்துணர்வு தரும் பொருள் காப்பியில் அதிகம் இருப்பதால் அருந்துபவர்கள் எப்போதும் புத்துணர்வுடன் இருப்பார்கள் என்கிறார் அமெரிக்க தேசிய காப்பி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோ டேருபோ. காப்பியில் உள்ள மூலப்பொருட்கள் சர்க்கரை நோய் தடுப்பானான இன்சுலின் சுரப்பைத்  தூண்டுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவப் பல்கலைக் கழகம் Keck School of Medicine of USC தெரிவித்திருக்கிறது.

consumer-coffee-trends-for-2018-coffee
Credit: DrinkPreneur

காப்பியில் இருக்கும் காஃபின் (caffeine) என்னும் உட்பொருளின் அளவு முக்கியமானது. வயதானவர்கள் முடிந்த அளவு காஃபின் நீக்கிய காப்பியைப் பருகலாம். அதேபோல் இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருப்பவர்களும் இதைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இவை இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்பவை.

கர்ப்பிணிகள் காபி குடிக்கலாமா?

காஃபின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும் என குழந்தைகள் மற்றும் பேறுகால மருத்துவ பல்கலைக்கழகம் (American College of Obstetricians and Gynecologists) நிரூபித்துள்ளது.  ஆகவே இதய நோயாளிகள் மற்றும் கொழுப்பு அதிமாக இருப்பவர்கள் மட்டும் காப்பி விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். அவர்களுக்கென கடைகளிலேயே காஃபின் நீக்கிய காபித்தூள் கிடைக்கிறது. ஆனால் உண்மையில் அவை முழுவதும் காஃபின்  நீக்கியவையாக இருப்பதில்லை. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

coffee bean
Credit: Unsplash

மேலும் சில டிப்ஸ்

  • காப்பி தயாரிக்கும்போது கொழுப்பு  நீக்கப்பட்ட பாலையே பயன்படுத்துங்கள். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கும். பால் மாவைவிட பாலே சிறந்தது.
  • முடிந்த அளவு சர்க்கரை இல்லாமல் காப்பி குடித்துப் பழகுங்கள்.
  • பில்டர் காப்பி குடிப்பது உங்கள் உடம்பில் கொழுப்பு உயர்வை கட்டுப்படுத்தும்.
  • மாலை மற்றும் இரவு வேளைகளில் காப்பி பருகுவதை தவித்திடுங்கள். இதனால் தூக்கம் குறையலாம்.

எனவே இனி காப்பி குடிக்கலாமா? என்ற கேள்வியே வேண்டாம். தாராளமாக அருந்துங்கள். இத்தனை பயன்கள் இருக்கும்போது என்ன கவலை. கரும்பு தின்னக் கூலியா? ஆனால் கரும்பு நீங்கள் தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!