உடற்பயிற்சி ஏன் காலை உணவிற்கு முன்பே செய்ய வேண்டும்? காரணம் இது தான்!

Date:

உடற்பயிற்சி எப்போது செய்ய வேண்டும்? உடற்பயிற்சியை காலை நேரத்தில் எழுந்தவுடன் செய்ய வேண்டும் என்பது காலங்காலமாக எல்லாரும் சொல்லும் ஒன்று. சரி அது ஏன் என்று கேட்டால் அந்த நேரத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பார்கள் சிலர். அப்போது தான் நேரம் கிடைக்கும் என்பார்கள் சிலர். அது மட்டுமா? என்றால் அதுவும் உண்மை என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம் என்பதே பதில். ஆம் உடற்பயிற்சியை காலை நேரத்தில் அதிலும் குறிப்பாக காலை உணவிற்கு முன்பு தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முழு பலனையும் பெற முடியும் என்கிறது ஆய்வின் முடிவு. 

உடல் எடை கூடுவது பெரும்பாலும் டைப் 2 சர்க்கரை நோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும்!

உடற்பயிற்சி குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி காலை நேரத்தில் அதுவும் காலை உணவிற்கு முன்பே உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலின் செயல்பாடு மேம்படும் என்பது தெரியவந்துள்ளது. முதலில் இன்சுலின் என்றால் என்ன என்று பார்ப்போம். இன்சுலின் என்பது கணையம் சுரக்கும் ஒரு வகையான ஹார்மோன். இது தான் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் தான் இன்சுலின், சர்க்கரை அல்லது நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனாக கருதப்படுகிறது.  

உடற்பயிற்சி எப்போது செய்ய வேண்டும்
Credit: Gq

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயை பொறுத்தவரை பொதுவாக இரண்டு வகை உள்ளது. டைப் 1 (இன்சுலின் சார்ந்த வகை) என்பது இந்த வகை குறைபாடு உள்ளவர்களின் கணையத்தால் இன்சுலினை சுரக்க முடியாது, ஏனெனில் அவர்களின் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் ஏதாவது தொற்றுக் கிருமிகளால் சேதமடைந்தோ அழிந்தோ இருக்கும். இந்த வகையால் 5 முதல் 10 % பேர் தான் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 

காலை உணவிற்கு முன் செய்யும் உடற்பயிற்சி சர்க்கரை நோய் வருவதை கண்டிப்பாக தடுக்கும் !

டைப் 2 (இன்சுலின் சார்பற்ற வகை) இந்த வகை பாதித்தவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறைந்து இருக்கும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். மேலும் கர்ப்ப காலத்தில் மட்டும் பெண்களை பாதிக்கும் சர்க்கரை நோய் வகையும் உண்டு.

ஒருவர் உடற்பயிற்சியே செய்யாமல் அல்லது உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் அதிக உடல் எடையுடன் இருக்கும் போது, அவரது உடல் இரத்த சர்க்கரையை செல்களுக்கு அனுப்ப அதிக இன்சுலினை எதிர்பார்க்கும். ஏனெனில் அதிக உடல் எடையினால் அவரது உடல் செல்கள், சுரக்கப்படும் இன்சுலினின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயல்படாது. இதனால் இன்னும் அதிக அளவு இன்சுலின் சுரக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் தான் உடல் எடை கூடுவது பெரும்பாலும் டைப் 2 சர்க்கரை நோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும்.

ஆய்வு முடிவு

சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை (University of Oxford) சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். அதில் இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக உடல் எடை இருந்த ஆண்களை கொண்டு ஒரு சோதனை செய்தனர். முதலில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்ட அவர்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் காலையில் 50 நிமிடங்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியை செய்ய சொன்னார்கள். முக்கியமாக ஒரு குழுவினர் காலை உணவிற்கு முன்னும், ஒரு குழுவினர் காலை உணவிற்கு பின்னும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். 

இப்படி தொடந்து ஆறு வாரங்களுக்கு உடற்பயிற்சி செய்தவுடன் அவர்களை சோதனை செய்ததில் காலை உணவிற்கு முன் உடற்பயிற்சி செய்தவர்களின் உடலில் சுரந்த இன்சுலினுக்கு அவர்கள் உடல் சிறந்த எதிர்வினை ஆற்றியது. அதாவது அவர்கள் உடல் குறைந்த இன்சுலினை சுரந்தால் போதும் என்ற நிலையை அடைந்தது. அதனால் அவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான ஆபத்து வெகுவாக குறைந்தது.

Also Read: உடற்பயிற்சி செய்யாமல் ஆபத்துக்குள்ளாகும் 140 கோடி மக்கள் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அதுவே காலை உணவிற்கு பின் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு இன்சுலின் ஹார்மோனுக்கு அவர்கள் உடல் புரிந்த எதிர்வினையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்க வில்லை. எதிர்வினைகள் மந்தமாக இருந்ததால் அதிக அளவு இன்சுலின் சுரக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.

checking weight
உடல் எடை கண்டறியும் எந்திரம் Credit: Diabetes

உடல் எடை குறையுமா?

அதே போல காலை உணவிற்கு முன் உடற்பயிற்சி செய்தவர்களின் உடலில் இருந்த கொழுப்பு, உணவிற்கு பின் உடற்பயிற்சி செய்தவர்களை விட இரு மடங்கு அதிகமாக எரிக்கப்பட்டது. இதனால் உணவிற்கு முன் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை வேகமாக குறையும் என்று அர்த்தம் கிடையாது. இப்படி எரிக்கப்படும் கொழுப்பு இரு மடங்கு என்றாலும் உணவை சாப்பிடாமல் எரிக்கப்படும் கொழுப்பு உடல் எடையை நிரந்தரமாக குறைக்காது. ஏனெனில் உடல் எடை என்று வரும் போது ஆற்றல் சமநிலை என்பது தான் முக்கியம். அதாவது எடுத்துக்கொள்ளும் ஆற்றல் மற்றும் செலவிடப்படும் ஆற்றல் சமநிலை என்பதே மிக முக்கியம்.

Also Read: கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மொத்தத்தில் காலை உணவை சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்து விட்டு, அதன் பின்னும் உணவை சாப்பிடாமல் இருந்தால் அது மேலும் எதிர்மறை ஆற்றல் சமநிலையை தான் உருவாக்கும். இதற்கு சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்வதே மேல். என்னதான் உணவிற்கு முன் உடற்பயிற்சியில் இரு மடங்கு கொழுப்பு எரிக்கப்பட்டாலும் உடல் எடை குறைவதில் பெரிய வேறுபாடு இருக்காது. ஆனால் காலை உணவிற்கு முன் செய்யும் உடற்பயிற்சி நிச்சயமாக உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதை தடுக்கும். அதனால் முடிந்தவரை காலையில் எழுந்தவுடன் உணவிற்கு முன் உடற்பயிற்சி செய்து விட்டு மறக்காமல் காலை உணவை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!