“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம்” என்ற ஒரு தகவல் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த சொற்றொடர் முதன்முதலில் 1913 இல் உருவாக்கப்பட்டது. இது 1866 இல் தோன்றிய பெம்பிரோக்ஷைர் (Pembrokeshire) பழமொழியை அடிப்படையாகக் கொண்டது. “Notes and Queries” என்ற பத்திரிக்கை கீழ்காணும் இந்த சொற்றொடரை முதன் முதலில் பதிவிட்டது.
“Eat an apple on going to bed, and you’ll keep the doctor from earning his bread.”
ஆப்பிள்களை சாப்பிடுவது உண்மையில் மருத்துவரிடம் செல்வதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக தொடர்புபடுத்தக் கூடாது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்றாலும், உங்கள் உணவில் ஆப்பிள்களைச் சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தின் பல அம்சங்களை மேம்படுத்த உதவும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உண்மையிலேயே மருத்துவரை ஒதுக்கி வைக்க உதவுமா என்பதை உற்று நோக்குகிறது இந்த பதிவு.
ஆப்பிள்கள் நீண்டகால ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பல நன்மைகளுடன் தொடர்புடையவை.
- கலோரிகள்: 95
- கார்போஹைட்ரேட்ஸ் : 25 கிராம்
- நார் சத்து: 4.5 கிராம்
- வைட்டமின் சி: தினசரி மதிப்பில் 9%
- காப்பர் : தினசரி மதிப்பில் 5%
- பொட்டாசியம்: தினசரி மதிப்பில் 4%
- வைட்டமின் கே: தினசரி மதிப்பில் 3%
குறிப்பாக, வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நடுநிலையாக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.

இதய ஆரோக்கியம்
அதிக அளவில் ஆப்பிள்களை சாப்பிடுவது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
20,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆப்பிள் உள்ளிட்ட வெள்ளை சதைப்பற்று கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைப்பது தெரியவந்துள்ளது.
ஆப்பிள்களில் உள்ள நார்ச்சத்து, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றது. இவை இரண்டும் இதய நோய் ஏற்படுவதற்கான காரணிகள்.
புற்றுநோயை தடுக்கும் ஆப்பிள்
ஆப்பிள்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்ட புற்றுநோய் உருவாவதைத் தடுக்க உதவும் பல சேர்மங்கள் உள்ளன.
41 ஆய்வுகளின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ததில், அதிக அளவு ஆப்பிள்களை உட்கொள்வது நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தை குறைப்பதாக தெரியவந்தது.
ஆப்பிள்களை சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை குறைகின்றது.
சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்து உட்கொள்வதால் வயிறு, பெருங்குடல், நுரையீரல், வாய்வழி மற்றும் உணவுக்குழாய் இவற்றை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று பிற ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கேன்சர் நோய்களிலிருந்து தடுப்பதில் ஆப்பிள்களின் முழுமையான ஆற்றலை மதிப்பிடுவதற்கும் பிற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் காரணிகள் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கவும் கூடுதல் ஆராய்ச்சி தேவை.

ஆப்பிள் நன்மைகள்
1. எடையை குறைக்க உதவும்.
2. எலும்பு ஆரோக்கியத்தை வலுவானதாக மேம்படுத்தும்.
3. மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
4. ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கும்.
5. நீரிழிவு நோய் உண்டாகும் வாய்ப்பு குறைவு.
ஆப்பிள் தீமைகள்
ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். மேலும் ஒவ்வொரு நாளும் பல ஆப்பிள்களை சாப்பிடுவது பல பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, குறுகிய காலத்தில் உங்கள் ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் நார்ச்சத்தை விரைவாக அதிகரிப்பது வாயு, வீக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பல பழங்கள் மற்றும் காய்கறிகள் இதேபோன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும் அவை ஆரோக்கியத்திற்கும் சமமாக பயனளிக்கும். கூடுதலாக, பலவிதமான பிற பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்வது உங்கள் உணவில் அதிக சுவையையும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மதிப்பையும் கூட்டும்.
- வாழைப்பழங்கள்
- ப்ரோக்கோலி
- கேரட்
- காலிஃபிளவர்
- திராட்சைப்பழம்
- மாம்பழம்
- பீச்
- பேரிக்காய்
- அன்னாசிப்பழம்
- கீரை
- ஸ்ட்ராபெர்ரி
- தக்காளி
Also Read: வைட்டமின் சி குறைபாடு: இந்த 7 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா?
கல்லீரலை பாதிக்கக் கூடிய 5 உணவுகள்! கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்!!