முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 நன்மைகள்!

Date:

வைட்டமின் ஏ,பி1,பி2, பி6,இ,சி,கே, கால்சியம், ஐயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் முட்டைக்கோஸில் இருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் முட்டைக்கோஸ், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது. முட்டைக்கோஸ் பயன்படுத்தி பொறியல், குழம்பு போன்ற உணவு வகைகளை சமைக்கலாம். முட்டைக்கோஸின் குணநலன்கள் சில…

ஆச்சரியம் தரும் முட்டைக்கோஸ் நன்மைகள்!

  • உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம்
  • முட்டைக்கோஸ், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது
  • சிலிகான், சல்பர் சத்துக்கள் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன
  • முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது.
  • உடலுக்கு ஊட்டம் தரும் முட்டைகோஸ் உடல் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.
  • தலைமுடி உதிர்வதைக் குறைக்கும்.
  • சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
  • வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

1. உடல் எடை குறைக்க

அதிக வைட்டமின், நார்ச்சத்து உள்ள முட்டைக்கோஸ் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும், குறைந்த கலோரி அளவை கொண்டுள்ளதால் உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம்.

2. உடல் நச்சு நீங்க

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி, சல்பர் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது. முட்டைக்கோஸில் உள்ள ‘இண்டோல் 3 கார்பனைல்’ என்ற சத்து, கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. முட்டைகோஸ்

3. இரத்த சர்க்கரை அளவு

உடல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முட்டைக்கோஸ், பிரக்கோலை, கீரை போன்ற காய்கறி வகைகள் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

4. ஆரோக்கியமான சருமம்

‘பியூட்டி மினரல்ஸ்’ என்றழைக்கப்படும் சிலிகான், சல்பர் சத்துக்கள் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன. இதனால், முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் நீங்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம். ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.

5. அல்சர்

அதிக காரமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது வெளியில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் அல்சர் பிரச்சினையை சரிசெய்கிறது. விட்டமின் சி இதனை கேபேஜென் என்றும் சொல்வார்கள். இது வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.

6. புற்றுநோய்

முட்டைகோஸ் சாப்பிடுவதால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வது முற்றிலும் தடுக்கப்படும்.

7. நோய் எதிர்ப்பு சக்தி

இதில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்கள் தாக்குவதில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

8. மலச்சிக்கல்

செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

9. எலும்பு

முட்டைகோஸில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!