வைட்டமின் டி குறைபாடு: இந்த 8 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றனவா?

Date:

வைட்டமின் டி குறைபாடு என்பது உலகளாவிய அளவில் இருக்கின்ற பிரச்சினை. உலகளவில் சுமார் 1 பில்லியன் மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது. ”சன்ஷைன் வைட்டமின்” என அழைக்கப்படும் வைட்டமின் டி நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. உடலில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றை தக்கவைத்துக் கொள்ள வைட்டமின் டி உதவுகின்றது. வைட்டமின் டி பற்றாக்குறையினால் தசை வலி், மூட்டு வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். உடலில் வைட்டமின்கள் சீரான போதுமான அளவு இருந்தால் மட்டுமே எலும்புகள், பற்கள் உறுதியாக இருக்கும். வைட்டமின் டி குறைபாட்டால் ரிக்கெட்ஸ் மற்றும் ஆர்த்திரிடிஸ் போன்ற உடல் நலக்கோளாறுகள் ஏற்படும்.

கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலோனோர் வீட்டில் இருந்தே தங்கள் அலுவலக வேலைகளை கவனித்து வருகின்றனர். இதனால் அந்த சமயத்தில் சூரிய ஒளி உங்கள் மீது பட்டிருக்காது. சூரிய ஒளி படாமல் இருக்கும் செடியின் இலைகூட பச்சை நிறத்தில் இல்லாமல் வெண்மை நிறமாக இருக்கும். செடிக்கான பச்சையம் சூரிய ஒளியில் இருந்தே கிடைக்கிறது. சூரியனின் கதிரில் இயற்கையான வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. வெயில் வெப்பத்திற்கு பயந்து வெளியே சென்று விளையாடுவதை தவிர்த்துவிடாமல் குறைவான வெயிலில் விளையாடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது அவசியமும் கூட. சராசரியாக நம் உடலில் வைட்டமின்-டி அளவானது 30 நானோகிராம் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் “வைட்டமின்-டி குறைபாடு” ஆகும்.

வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்

1. எப்போதும் நீங்கள் சோர்வாகவும், சத்து இல்லாதது போலும் உணர்ந்தால் உங்கள் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறையாக இருக்கிறது

2. நடக்கும்போதோ, படிக்கட்டு ஏறும்போது, உங்களுக்கு தொடர்ச்சியாக தசை வலி அல்லது மூட்டு வலி இருந்தால் உங்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறையாக இருக்கலாம்.

3. அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படுவதும் வைட்டமின் டி குறைபாடாக இருக்கும். 

4. காயங்கள் குணமாக தாமதமாவதும் வைட்டமின் டி குறைபாட்டினால் இருக்கலாம். 

5. அடிக்கடி செரிமான பிரச்சினை வந்தால் வைட்டமின் டி குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. 

6. வைட்டமின் டி குறைபாடு இருப்பின் உங்கள் முகம் மிகவும் சோர்வாக காணப்படும்.

7. உடலில் வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால் மனச்சோர்வு உண்டாகும்.

8. அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடாகவும் இருக்கலாம்.

வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி உணவுகள் 

பால்: பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. தினமும் பால் குடிப்பதால் நமக்கு 20 சதவிகிதம் வைட்டமின் டி கிடைக்கிறது.

முட்டை: முட்டை மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது.

மீன்: புரதம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால் மீன் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மஷ்ரூம்: மஷ்ரூம்களில் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கின்றது. மேலும் இதில் வைட்டமின் பி1, பி2, பி5, தாதுக்கள் மற்றும் காப்பர் ஆகியவையும் இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

யோகர்ட்: யோகர்டில் வைட்டமின் டி இருக்கிறது. இதனை கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலே தயார் செய்து சாப்பிடலாம். மேலும் இதில் புரத சத்தும் அடங்கியிருக்கிறது.

ஓட்ஸ்: ஓட்ஸிலும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. மேலும் இதில் தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இது உங்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழச்சாறில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

சூரிய ஒளியில் நிற்பதோடு இந்த உணவுகளை சீராக சாப்பிட்டு வந்தால் உடலில் வைட்டமின் டி சத்து சீராக இருக்கும். காலை 10.30 முதல் 12 மணி வரையிலான சூரிய ஒளியில் வைட்டமின்-டி அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் டி-யை சீராக வைத்துக் கொள்ளவும், 5 முதல் 30 நிமிடங்கள் வாரத்திற்கு 2 நாட்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட்டால் போதுமானது. வைட்டமின்-டி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ளலாம். 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!