ரோஸ்மேரி எண்ணெய் பல நூற்றாண்டுகளாக அழகுக்காகவும் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ்மேரி எண்ணெயின் முக்கியமான 6 மருத்துவப் பயன்கள் இதோ உங்களுக்காக…
ரோஸ்மேரி
மத்திய தரைக்கடல் மற்றும் துணை இமயமலைப் பகுதிகளில் வளரும் ஊசிபோன்ற இலைகளைக் கொண்ட நறுமணமுள்ள பசுமையான புதர் ஆகும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு, வெள்ளை, ஊதா அல்லது நீல நிறம் கொண்டவை. ரோஸ்மேரி பல நூற்றாண்டுகளாக அழகுக்காகவும் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அறிவியல் பெயர் ரோஸ்மேரி அஃபிசினாலிஸ் ஆகும். இவை புதினா குடும்பத்தின் ஒரு வகையாகும் அதாவது லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்தது. ‘ரோஸ்மேரினஸ்’ இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் அர்த்தம் ‘கடல் பனி’ என்பதாகும். ரோஸ்மேரி எண்ணெய், பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது அரோமோதெரபியில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய எண்ணெய் வகைகளில் ஒன்று.
மருத்துவ பண்புகள்:
பல்வேறு ஆய்வுகளில் ரோஸ்மேரி நரம்பியல் மற்றும் மருந்தியல் பண்புகளை கொண்டுள்ளது. நியூரோ புரோடெக்டிங், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல், அலர்ஜி எதிர்ப்பு, கிருமி நாசினி, வலி நிவாரணி, மற்றும் ஒப்பனை பண்புகள்.
மேலும், மனநிலை, கற்றல், நினைவகம், பதட்டம் மற்றும் தூக்கம் ஆகியவற்றில் முக்கிய மருத்துவ விளைவுகளைக்கொண்டுள்ளது.
கூறுகள்:
ஆல்ஃபா பைனின், 1,8-சினியோலி, கேம்பர் & போர்னோல், ரோஸ்மேரினிக் அமிலம், கார்னோயிக் அமிலம், கார்னசோல், பிளேவோனாய்ட்ஸ், ஆல்கலாய்டு ஆகியவை உள்ளது.
ரோஸ்மேரி முக்கியமான 6 மருத்துவப் பயன்கள்:
1. நுரையீரல் ஆரோக்கியம் :
இதில் இருக்கும் 1,8-சினியோலி சளி நீக்கியாக செயல்பட்டு, இருமல் தூண்டப்பட்டு சளி வெளியேறுவதை எளிதாக்குகிறது. மேலும், ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருப்பதால் இவை நுரையீரலில் ஏற்படும் தொற்றை குறைக்கிறது.
2. சரும ஆரோக்கியம்:

ரோஸ்மேரி எண்ணெய் அழகு சாதன பண்புகள் கொண்டுள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கியமான அத்தியாவசிய எண்ணெய் வகைகளில் ஒன்றாகும். எண்ணெய் மற்றும் உலர்ந்த சருமம் உடையவர்கள் பயன்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் கரும் தழும்புகள் மறைய உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.
3. கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது:
கூந்தல் பராமரிப்பதிலும் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கூட சேர்த்து ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆலோபீசியா தலை வழுக்கை உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
4. மனச்சோர்வை குறைக்கிறது:
உலகளாவிய நோய் சுமையில் 13% மனநிலைக் கோளாறு காரணமாகும் சிகிச்சை முகவர்கள் கிடைக்கும் போது பொதுவாக வாய் வழியாக நிர்வகிக்கப்படும் போது பெரும்பாலான தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் அத்தியாவசிய எண்ணெய் உள்ளிழுப்பதை ஒரு கவர்ச்சியான மாற்று சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலைசுற்றல், பதற்றம், ஆகியவற்றை குறைகிறது. சீரம் கார்டிசோல் அளவு குறைத்து மற்றும் மூளையில் டோபமைன் உற்பத்தி அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் மன சோர்வு குறைகிறது.
5. நினைவு திறனை அதிகப்படுத்துகிறது:
ரோஸ்மேரி ‘நினைவு மூலிகை’ என்று shakespeare ophelia கூறுகிறார். மூளை பலவீனமாக உள்ளவர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்களின் நினைவு திறனை அதிகரிக்கிறது. நியூரோபுரக்டிவ்தன்மை கொண்டதால் வயதாவதால் ஏற்படும் மறதியை குறைக்கிறது.
6. வலி நிவாரணி:
இதில் உள்ள கேம்பர் மற்றும் ரோஸ்மேரினிக் அமிலம் வலி நிவாரணி பண்புகள் கொண்டுள்ளதால் தலைவலி, மூட்டு வலி மற்றும் தசைவலியை குறைக்கிறது.
குறிப்பு: ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
Also Read: டெங்குவை எதிர்க்கும் சித்த மருத்துவம் – கசாயங்களின் நன்மைகள்
சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்
மிளகு கீரை எண்ணெய் அல்லது புதினா எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் 8 நன்மைகள்!