பப்பாளி பழத்தின் 8 சிறந்த பயன்கள்..

Date:

பப்பாளியில் அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…

பப்பாளி (152 கிராம்) அளவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
கலோரிகள்: 59
கார்போஹைட்ரேட்டுகள்: 15 கிராம்
நார்சத்து : 3 கிராம்
புரதம்: 1 கிராம்
வைட்டமின் ஏ : 33%
வைட்டமின் பி 9 : 14%
பொட்டாசியம் : 11%
கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சி, பி 1, பி 3, பி 5, ஈ மற்றும் கே ஆகியவை அடங்கியுள்ளன.

செரிமானம்

பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி புரதங்களை உடைப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. எனவே, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது மலச்சிக்கலுக்கு ஒரு வீட்டு மருந்தாக பப்பாளி உதவுகிறது. பப்பாளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

இதய நோய்

பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ-ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக செயல்படுகின்றன, எனவே இதய நோய்கள் மற்றும் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கும். நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன. உங்கள் உணவில் அதிக பப்பாளி சேர்த்துக்கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

கண் பார்வை அதிகரிக்க

நம் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவசியமான வைட்டமின் ‘ஏ’ பப்பாளியில் நிறைந்துள்ளது.

நீரிழிவு

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பப்பாளியை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் கொழுப்பையும் பராமரிக்க உதவும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் மற்றும் பயோ மெட்டீரியல் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வின்படி, கிரீன் டீ மற்றும் புளித்த பப்பாளி ஆகியவை நீரிழிவு நோய்க்கான தடுப்பு வழிமுறையாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கில், நீரிழிவு நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பப்பாளி பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளி வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். மேலும் இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக அறியப்படுகிறது. முடி மற்றும் தோல் உள்ளிட்ட உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு சிறந்தது.

சுத்திகரிப்பு

செயலில் உள்ள என்சைம்கள் அசுத்தங்களை அகற்றச் செய்வதால் பப்பாளி இயற்கையான தோல் சுத்தப்படுத்தியாக இருக்கும். கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.

கீல்வாதம்

கீல்வாதத்தால் வலி ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் மூட்டுகள் வீக்கம் தான். இதை தினமும் உட்கொள்வதால், மூட்டு வலியைக் குறைக்கும்.

புற்றுநோய்

பப்பாளியில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட லைகோபீன் நிறைந்து உள்ளது. புற்றுநோயின் வளர்ச்சியின் முக்கிய அம்சமாக உருவாகும் ஆக்ஸிஜனேற்றம் பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களால் சேதமடைகிறது.

Also Read: கிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்!

வாழைப்பழத்தின் ஊட்டச்சத்துகள் மற்றும் 10 நன்மைகள்!

‘பழங்களின் அரசன்’ மாம்பழத்தின் 10 நன்மைகள்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!