‘The Golden Vitamin’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வைட்டமின் சி ஆனது உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களில் மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணமாக இருக்கின்றது. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இதயத்தை பாதுகாக்கின்றது. பல், எலும்பு, சருமம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சி மிகவும் அவசியமாகின்றது.
வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் அறிகுறிகள்
1. பல்
பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வைட்டமின் சி குறைபாடுதான் காரணம். மேலும் பற்களின் ஆரோக்கியம் மட்டுமல்லாது சருமமும் பாதிக்கப்படும். வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் ஆக இருக்கிறது. வைட்டமின் சி குறைபாட்டால் உடலில் கொலாஜன் உருவாவது குறையும். இதனால் ஈறுகளில் இரத்தக் கசிவு உண்டாகும். மேலும் ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்னையும் உண்டாகும்.
2. வறட்சி
உடலில் வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்பட்டால் சருமத்தில் வறட்சி ஏற்படும். மேலும் சருமத்தில் சுருக்கம் ஏற்படும். வைட்டமின் சி சத்துள்ள பொருட்களை உட்கொள்ளும்போது, அதிலுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்தை குணமாக்கும்.
3. இரத்த சோகை
வைட்டமின் சி சத்து குறைந்தால் உடலில் இரும்பு சத்து குறைபாடும் ஏற்படும். இரும்பு சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படும். அதற்கு இரும்பு சத்துள்ள உணவை உட்கொண்டால் மட்டும் போதாது, அதனுடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
4. காயம்
வைட்டமின் சி பற்றாக்குறையால் உடலில் காயங்கள் ஏற்பட்டால் சரியாக நீண்ட நாட்களாகும். பற்றாக்குறை காரணமாக காயம் பெரிதாகவும் வாய்ப்பு இருக்கிறது.
5. உடல் பருமன்
உடல் பருமனாக வைட்டமின் சி குறைபாடும் ஒரு காரணம். வைட்டமின் சி குறைபாடால் உடலில் கொழுப்பு தேக்கம் அதிகரித்து, அதனால் உடல் எடை அதிகரிக்கும்.
6. நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி-யில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
7. உடல் சோர்வு
உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்படும். உடலில் வைட்டமின் சி குறைந்தால் எப்போதும் சோர்வாக இருப்பது போல உணருவீர்கள். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இரத்த சோகை ஏற்படும்.
புளிப்பு சுவைமிக்க பழங்கள் அனைத்திலும் இந்த வைட்டமின் சி உள்ளது. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை, வெள்ளரிக்காய், பப்பாளி போன்ற பழங்களில் வைட்டமின் சி உள்ளது. கீரை வகைகள், தக்காளி, முட்டைக்கோஸ், குடை மிளகாய் ஆகிய உணவுப்பொருள்களிலும் வைட்டமின் சி அதிகமாக இருக்கின்றது. உடலில் இரும்புச் சத்து தங்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் இந்த வைட்டமின் சி முக்கியமானதாகின்றது. நெல்லிக்காயை உலர வைத்தாலும், சமைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் குறையாது ஆதலால் நெல்லியை எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். நம் உடலுக்கு எல்லாச் சத்துகளுமே முக்கியமான தேவை என்றாலும், செல்களின் வளர்ச்சி மற்றும் செல்களின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.
Also Read: புரதம் நிறைந்த 10 சிறந்த உணவுகள்
‘பழங்களின் அரசன்’ மாம்பழத்தின் 10 நன்மைகள்
புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த பழங்களை சாப்பிடலாம்!