உலகின் பல்வேறு நாடுகள் 5G தொழில்நுட்பத்தின் சாதனைகளை அனுபவித்துவருகின்றன. ஆனால் மருத்துவத் துறையில் மிகப்பெரிய புரட்சிகளை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக மேற்கொள்ள முடியும் என நிரூபித்துள்ளர்கள் சீன மருத்துவர்கள். 5G தொழில்நுட்பத்தின் மூலம் 3000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவர் வீடியோ மூலம் அறுவை சிகிச்சை ஒன்றினை வெற்றிகரமாக கையாண்டுள்ளார். ஹுவெய் நிறுவனத்துடன் இணைந்து பிஎல்ஏ மருத்துவமனையில் தான் இந்த`தொலைதூர அறுவை சிகிச்சை’ நடத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிக்கல் காரணமாக வரக்கூடிய பார்க்கின்சன்’ நோயால் அவதிப்பட்ட ஒரு நோயாளி, சீனாவின் பெய்ஜிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மூளையில் நியூரோ ஸ்டிமுலேட்டர் (neuro-stimulator ) என்னும் கருவியைப் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையை, தெற்கு சீனாவைச் சேர்ந்த லிங்க் ஜிபெய் என்ற மருத்துவர் மேற்கொண்டார்.
அறுவைசிகிச்சை மேற்கொண்ட டாக்டர் லிங்க் ஜிபெய் கூறும்போது, `இந்த அறுவை சிகிச்சை நேரில் இருந்து செய்வதுபோன்றே இருந்தது. தொலைவில் இருந்த உணர்வே இல்லை’ என்றார்.
அதன்படி, பெய்ஜிங் மருத்துவமனையில் இருந்த அந்த நோயாளிக்கு 3,000 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வீடியோ மூலம் அறுவைசிகிச்சை செய்தார். 3 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சிகிச்சையை அடுத்து, தற்போது அந்த நோயாளி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுவைசிகிச்சை மேற்கொண்ட டாக்டர் லிங்க் ஜிபெய் கூறும்போது, `இந்த அறுவை சிகிச்சை நேரில் இருந்து செய்வதுபோன்றே இருந்தது. தொலைவில் இருந்த உணர்வே இல்லை’ என்றார்.
இதற்கு முன்
கடந்த ஆண்டு இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு சீனாவில் இருக்கும் பியுஷோயு நகரில் உள்ள மருத்துவமனையில் ஈரல் பாதிக்கப்பட்ட பன்றி அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பெய்ஜிங் மருத்துவமனையிலிருந்து ரோபோ மூலம் பாதிக்கப்பட்ட ஈரல் பகுதியை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
முதன்முறை 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பெருமையை சீனா தன்வசம் தக்கவைத்துள்ளது. இன்னும் எதிர்காலத்தில் எந்தெந்த சிக்கலான விஷயங்களுக்கு 5G தீர்வினை கொடுக்க இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.