கோடைக்காலத்தில் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய மற்றும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சுவைமிகுந்த பழங்கள் சிலவே. உணவாகவும் மருந்தாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை பார்க்கலாம்.
கோடையில் கிடைக்கக்கூடிய பழங்கள்
மாம்பழத்தின் பயன்கள்

முக்கனிகளில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும், சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்து விளங்குகிறது. மாம்பழத்தில் வைட்டமின்-ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின்-ஏ மிகவும் அவசியம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகள், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். மாம்பழத்தை சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். உடல் வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.
தர்பூசணி

கோடைகாலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கோடைகாலத்தில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை போக்குகிறது. தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினை தீர்கிறது. நம் உடலுக்கு தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் தர்பூசணியில் கிடைக்கிறது. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
கிர்ணிப்பழம்

கிர்ணிப்பழம் அதிக தண்ணீர் சத்து உண்டு. உடலில் உள்ள செல்களை பாதுகாப்பதோடு தோல்களையும் பாதுகாக்கிறது. இளமையும் அதிகரிக்கிறது. கிர்ணிப்பழம் ஜீரண உறுப்பு நன்றாக செயல்பட உதவும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது.
மல்பெரி

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் மல்பெரி உதவுகிறது. இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட இந்த பழத்தில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் உண்டு. புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது. மெலனின் உற்பத்தியைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நாவல்பழம்

நாவல்பழம் பசியை தூண்டக்கூடியது. தோள்களில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பழம். இரும்பு சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. வாய் மற்றும் குடல்புண்களை ஆற்றும் வல்லமை பெற்றது. உடலின் ரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் சூட்டினை தடுக்கிறது.
Also Read: நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 சிறந்த நன்மைகள்…