கொரோனா காலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய 5 மருத்துவ சாதனங்கள்!

Date:

தற்போது நாம் கொரோனா காலத்தை கடந்து கொண்டிருக்கிறோம். நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் மிக கவனமாக பாதுகாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் நம்மை பாதுகாக்க மிகவும் அவசியமான ஒன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அந்த வகையில் கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் தயாராக இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்களை இங்கு பார்க்கலாம். மழைக்காலமும் வருவதால் சில மருத்துவ சாதனங்கள் வீட்டிலேயே இருந்தால் நல்லது.

மருந்தகங்கள் எப்போதும் திறந்திருப்பதால், நீங்கள் இவற்றை எளிதில் வாங்கிக் கொள்ளலாம். வெளியே செல்ல முடியவில்லையெனில் இந்த பதிவிலேயே Amazon தளத்துக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது. அதை க்ளிக் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.

1. தெர்மாமீட்டர்

முக்கியமான விஷயம் தெர்மாமீட்டர். இதன் மூலம் நம் உடலின் வெப்பநிலையை கண்டறிய முடியும். இதில், மெர்குரி தெர்மாமீட்டர், எலக்ட்ரிக் தெர்மாமீட்டர் உள்ளிட்ட பல வகைகள் உள்ளது. அனைத்தும் வெவ்வேறு விதமான அளவுகளை கொண்டிருக்கும். அதற்கு ஏற்றார்போல் நீங்கள் உங்கள் உடல் வெப்பநிலையை அறிந்துக் கொள்ளலாம்.

corona fever check

2. டிஜிட்டல் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

இதன் மூலம், உங்களின் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்டறிய முடியும். அத்துடன் நாடித் துடிப்பையும் கண்டறியலாம். கொரோனா நோய் அறிகுறிகள் இருபவர்களுக்கு அரசு தரப்பில் இதன் மூலமும் பரிசோதனை செய்யப்பட்டது.

உங்கள் உடலில், 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. இதய குறைபாடு, நுரையீரல் குறைபாடு, மற்ற நோய்கள் உடையவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாகவே இருக்கும்.

அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் ஆக்ஸிஜன் அளவு குறையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைவது ஹைபோக்ஸியா எனப்படுகிறது. ஆக்சிஜன் குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

3. இரத்த அழுத்தமானி

உங்களுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் இருக்கிறதென்றால், இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் மானியை உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்க வேண்டும். வீட்டில் யாருக்காவது, இரத்த அழுத்த நோய் இருந்தால் வீட்டிலேயே பரிசோதித்துக் கொள்ளலாம். கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்படுவோர் இதன் மூலம் பரிசோதித்து மருத்துவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

coronaequipmen 1
Digital Pulse Oximeter

4. குளுக்கோ மீட்டர்

சர்க்கரை நோயாளிகளுக்கு அவசியமான ஒன்று குளுக்கோ மீட்டர். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கண்டறிய முடியும். காலை உணவுக்கு முன் இரத்த சர்க்கரை அளவு 80 முதல் 100 வரையிலும். உணவுக்கு பின் 140லிருந்து 160 வரையிலும் இருக்க வேண்டும்.

5. முதலுதவி கருவிகள்

சிறிய காயங்களுக்கு மருந்து செய்ய அதற்கு தேவையான பொருட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அதில்…

  • பஞ்சு (Cotton)
  • Adhesive Bandages
  • கட்டும் துணி (Adhesive cloth tape)
  • மருந்து (ointment)
  • கத்திரிக்கோல் ( Scissors)
  • ரோலர் கட்டு – (Roller Bandages)
  • Tweezers
  • சுத்தம் செய்யும் மருந்து (Antiseptic Liquid)

ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

இவை அனைத்தும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய பொருட்கள். குறிப்பாக வயதானவர்கள் இருக்கும் வீட்டில் அவசியம் தேவை.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பொருட்களை நாங்கள் தயாரிக்கவில்லை. பொருட்களின் உண்மைத்தன்மைக்கும், நம்பகத்தன்மைக்கும், தரத்திற்கும் NeoTamil.com நிர்வாகம் பொறுப்பல்ல. வாசகர்களே பொருட்களைப் பற்றி படித்து அறிந்து கொண்டு முடிவை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!