சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கும், மனதுக்கும் கிடைக்கும் 20 சிறந்த நன்மைகள்!

Date:

சைக்கிளிங் செய்வது நம் உடலில் ஏற்படும் பலவித கோளாறுகளை தடுப்பதுடன், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. முறையான உணவும், சரியான உடற்பயிற்சியும், உறக்கமும் இருந்தால் நலமுடன் வாழமுடியும்.

மேக்மில்லன் என்பவரால் 1839ல் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. சைக்கிள் ஓட்டுவது என்பது உடலை சீராகவும், கட்டுடனும் வைத்துக்கொள்ள உதவுவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கும், மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கும் சைக்கிளில் செல்வதையே விரும்புகின்றனர்.

cycling benefits

சைக்கிள் ஓட்டுவதால் உண்டாகும் நன்மைகள்:

  1. சைக்கிள் ஓட்டுவது, மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவுவதுடன், நம் மனநிலையை சீராக்கவும் உதவுகின்றது.நாள் முழுவதும் மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும். 
  2. உடல் எடையை குறைக்க உதவுவதுடன், கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
  3. சைக்கிள் ஓட்டுவதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உள்ளத்திற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பினை மேம்படுத்துவதோடு, எலும்புகளையும் உறுதிப்படுத்துகிறது.
  4. சைக்கிள் ஓட்டுவது, இருதயத்தின் தசைகளை பலப்படுத்த உதவுகிறது.
  5. சைக்கிள் ஓட்டுவது, கொழுப்பை குறைக்கிறது.
  6. சைக்கிளிங் செய்வதால் சில வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
  7. பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது.
  8. குறைந்த அளவில் உடல் உழைப்பு செய்பவர்களுக்கு, சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தினமும் சைக்கிளிங் செய்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
  9. மன அழுத்தம், மனச்சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது.
  10. சைக்கிள் ஓட்டுவது, காலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் வலு ஏற்படுத்துகிறது. பாதங்களில் உள்ள சிறிய தசைகள் வலுவாகின்றன.
  11. அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால் 300 கலோரிகள் வரை நம் உடலிலிருந்து குறைக்கப்படுகிறது. எனினும், வேகத்தையும், உடல் எடையைப் பொறுத்தும் இது மாறுபடும்.
  12. தினமும் சைக்கிள் ஓட்டுவது, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
  13. நமது உடலில் இருக்கும் மூட்டுகளை, வலுவானவைகளாக மாற்றுகிறது.
  14. சர்க்கரை நோயாளிகள் சைக்கிள் ஓட்டுவதால், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். 
  15. தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து நம்மையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.
  16. சைக்கிள் ஓட்டுவதால் காலில் உள்ள தசைகள், தொடைப்பகுதி தசைகள், முதுகுத் தண்டு, இடுப்பு போன்றவை வலிமையுறும்.
  17. ரத்த கொதிப்பு நோய் வராமல் தடுக்கிறது.
  18. ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள்வராமல் தடுக்கிறது. 
  19. வியர்வை நல்ல அளவில் வெளியேறிவிடுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறைகிறது.
  20. தினமும் சைக்கிள் ஓட்டுவதால், இதயத்தசை நார்களில் அதிகமான ரத்தத்தை ரத்த நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. இதனால் மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.

Note: மூட்டு வலி உள்ளவர்கள், இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் மருத்துவரிடம், மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று சைக்கிள் ஓட்டவும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!