தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால் முகம் பொலிவுடனும், கூந்தல் அழகுடனும் இருப்பதோடு உடலுக்கும் வலு சேர்க்கும். தினமும் சீரக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான உடல்நலத்திற்கு வழிவகுக்கும்.
சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். இது பல உடல்நல பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் இயற்கை மருந்தாகும்.
சீரக தண்ணீரின் 15 சிறந்த பயன்கள்:
- காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகிய பாதிப்புகளில் இருந்து, சீரக தண்ணீர் நிவாரணம் அளிக்கும். சீரக தண்ணீர் வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது.
- கர்ப்பிணி பெண்கள் சீரக தண்ணீர் அருந்துவதால் அவர்களின் செரிமானத்தை மேம்படுத்துகின்றது.
- தாய்மார்கள் சீரக தண்ணீர் குடிப்பதால், பால் நன்கு சுரக்க உதவும்.
- நம் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். சீரக தண்ணீர் அருந்துவதால், நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதன் மூலம் கிருமிகள், நோய்கள் நம்மை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
- வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.
- சீரக தண்ணீரை குடித்து வந்தால், இருதயத்தில் தங்கி இருக்கும் சளியை அகற்றுவதோடு, நம்மை சீராக சுவாசிக்கவும் உதவுகிறது. இது சளியையும் குணப்படுத்தும் தன்மையுடையது.
- இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் சீரக தண்ணீரை குடித்து வருவது நல்லது.
- நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும் பொட்டாசியம் முக்கியமானது. பொட்டாசியம் சீரக தண்ணீரில் அதிகம் இருப்பதால், உடல் ஆற்றல் மேம்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
- கல்லீரல் செயற்பாட்டிற்கு சீரக தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கல்லீரலில் உள்ள நச்சு தன்மைகளை வெளியேற்ற உதவும்.
- சீரகத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இது இரத்த சோகையை குணமாக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு இரும்பு சத்து மிகவும் முக்கியமானது. இரும்புச்சத்து குறைபாடுகளுக்கு சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் தீர்வு காண முடியும்.
- மாதவிடாயின் போது ஏற்படும் வலியை போக்க, சீரக தண்ணீர் சிறந்த மருந்தாகும்.
- சீரகத்தில் கால்சியம், பொட்டாசியம், செலினியம் மற்றும் காப்பர் போன்ற பளிச்சிடும் சருமத்திற்கு உதவும் சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு, சீரக தண்ணீர் உதவுகின்றது.
- சீரக தண்ணீரில் வைட்டமின் ஈ இருப்பதால், முகத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்கவும், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும்.
- முகப்பரு மறைவதற்கு, சீரக தண்ணீர் பெரிதும் உதவுகின்றது. இதனை முகத்திற்கு தேய்ப்பதன் மூலம் முகமும் பளிச்சிடும்.
- சீரக தண்ணீரில் இருக்கும் சத்துகள், முடி வளர்ச்சிக்கும், முடியின் வேர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்க கூடியவை.
ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ்க வளமுடன்.
Note: அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். இந்த தகவல்கள் பொதுப்பயன்பாட்டுக்கு மட்டுமே. மருத்துவ ஆலோசனைகளுக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்.