Home நலம் & மருத்துவம் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 சிறந்த நன்மைகள்!

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 சிறந்த நன்மைகள்!

உணவே மருந்தான காலம் அது, மருந்தே உணவாக இருக்கும் காலம் இது! இயற்கை நமக்கு பல அற்புதமான பொக்கிஷங்களை கொடுத்துள்ளது. அதில் மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள் தேன். ‘வயிற்றின் நண்பன்’ என தேனைக் கூறுவது உண்டு. தேன், உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவசியம் வைத்திருக்க வேண்டிய பொருள் இது. தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.

கொம்புத் தேன், மலைத் தேன், புற்றுத் தேன், பொந்துத் தேன் மற்றும் மனைத் தேன் என, தேனில் ஐந்து வகைகள் உள்ளன. தேன் ஆற்றல் நிறைந்தது. தேனில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. 100 கிராம் தேனில் 304 கலோரி அடங்கியிருக்கிறது.

தேன் பயன்கள்

முதியோர் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தேனைக் அளவோடும் குறைவாகவும் பயன்படுத்த வேண்டும். தேன் சுத்தமானதா, அல்லது பதப்படுத்தப்பட்டதா என்பதை பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

 1. தேன், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மேலும் இது ரத்தம் உறைதலை தடுத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும் திறன் கொண்டது.
 2. கல்லீரல் மிக முக்கியமான மனித உள் உறுப்பு ஆகும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேன் சாப்பிடுவது நல்லது. பாலுடன் தேன் கலந்து குடித்தால் கல்லீரல் வலிமையாக இருக்கும். எலுமிச்சை ஜுஸுடன் தேன் கலந்து குடித்தாலும் கல்லீரல் பலமாகும்.
 3. இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த மருந்து. கால் டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொடுத்தால், இரவில் வரக்கூடிய இருமலைக் கட்டுப்படுத்துவதோடு, அதன் வீரியத்தையும் குறைக்கும். மேலும் ஆழ்ந்த உறக்கத்தையும் தரவல்லது. தேனை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆன்டிபயாடிக்ஸ் தரும் பக்க விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறலாம்.
 4. தேன் சாப்பிடுவதால், மன சோர்வு, மனஅழுத்தம், பதற்றம் மற்றும் மன உளைச்சல் போன்றவற்றை போக்கி மனதிற்கு நல்ல அமைதியைத் தரும்.
 5. தேன் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
 6. தேன் சாப்பிடுவதால் விரைவில் செரிமானம் நடக்கிறது. மலச்சிக்கலையும் போக்குகிறது.
 7. நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, புற்றுநோயை தடுக்கும் சக்தியினை தேன் உடலுக்கு வழங்குகிறது. புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத ஆற்றல் தேனுக்கு உண்டு.
 8. வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும்.
 9. இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
 10. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் இருந்தும் விடுபடலாம்.
 11. தேனில் ஊறவைத்த வெங்காயத்தை உட்கொள்வதால், தூக்கமின்மையை சரி செய்யும், கொலஸ்ட்ராலை குறைக்க உதவும், நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். தேனுடன் இஞ்சி மற்றும் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
 12. தூக்கம் வரவில்லை என்றால், ஒரு டீஸ்பூன் தேன் குடித்தால், நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.
 13. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
 14. காலை உணவிற்குப் பின் தினமும், மாதுளம் பழச்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியம் உண்டாகும். புது ரத்தமும் உற்பத்தியாகும்.
 15. உடல் பருமனாக இருப்பவர்கள், தேனுடன் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து விடலாம்.

Note: அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுப்பயன்பாட்டுக்கு மட்டுமே. மருத்துவ ஆலோசனைகளுக்கு தகுந்த மருத்துவரை அணுகவும். முதியோர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் தேனைக் குறைவாகப் பயன்படுத்தவும்.

NO COMMENTS

error: Content is DMCA copyright protected!