கசப்பான கற்றாழையின் 15 மருத்துவப் பயன்கள்!

Date:

இயற்கையாகவே வளரும் கற்றாழையில், நம்மை வெப்பத்திலிருந்து தணிக்கும் குளுமையும், பிணியைத் தீர்க்கும் மருந்தும், அழகை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் புதைந்து கிடக்கின்றது.

கூர்மையான சிறு சிறு முட்களைக் கொண்டிருக்கும் கற்றாழை உடல் உஷ்ணம், ஆஸ்துமா, குடல் புண், போன்ற நோய்களுக்கு ஒரு நல்ல மருந்தாகும். கற்றாழையின் ஓரங்களில் உள்ள முட்களை நீக்கி, இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியிருக்கின்றது.

aloe vera plants 2731140 640

வெப்பமான நிலையிலும் தண்ணீர் அதிகம் இல்லாத வறண்ட சூழ்நிலையிலும் பல ஆண்டுகள் வளரும் செடி இது. கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் இந்த கற்றாழை தற்போது நகரங்களில் வீடுகளிலும் விருப்பமாக வளர்க்கப்படுகின்றது. அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றைக் கற்றாழையிலிருந்து தயாரிக்கின்றார்கள்.

கற்றாழை பயன்கள்

கற்றாழையில் உள்ள நன்மைகள்

 1. கற்றாழை, உட்கொள்வதால் உடலில் உள்ள இரத்த சிவப்பு அனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஹீமோகுளோபின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.
 2. கற்றாழை சாறு, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான கோளாறுகளை தீர்க்க உதவுகிறது.
 3. கற்றாழை, உயிரணுக்களை உற்பத்தி செய்ய வைத்து, உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கின்றது.
 4. கற்றாழை ஜெல், சருமத்தில் உண்டான தடிப்புகள், காயங்கள், மற்றும் கட்டிகள் போன்ற பாதிப்புகளை குணமாக்குகிறது.
 5. 30-40 நாட்கள் கற்றாழை சாற்றை தினமும் இரண்டு வேளை தலைக்குத் தடவுவதால் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கிறது.
 6. கற்றாழை, தீராத வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.
 7. வாய்வுத் தொல்லையை போக்குவதுடன், நீடித்த மலச்சிக்கலையும் குணப்படுத்துகின்றது.
 8. கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசுவதன் மூலம், முகம் பளிச்சிட வைக்கிறது. முகத்திலுள்ள கரும்புள்ளிகளையும் நீக்குகிறது.
 9. கற்றாழை ஜெல், புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதுடன் வியர்க்குருவை போக்குகிறது.
 10. தீக்காயத்தினால் ஏற்பட்ட புண்ணை ஆற்றும் தன்மை கற்றாழைக்கு உண்டு.
 11. கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருக்கிறது. இவை தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.
 12. கற்றாழை பூச்சி கடி, தடிப்புகள் உள்ளிட்டவற்றை குணப்படுத்துகின்றது.
 13. கற்றாழையை முக சவரம் செய்த பின் சருமத்தை புத்துணர்வுடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க பயன்படுத்தி வருகின்றனர்.
 14. கற்றாழை ஜெல், தலைமுடியை வேரிலிருந்து வலுப்படுத்தியும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
 15. கற்றாழை உங்கள் உச்சந்தலையில் ஈரப்பதத்தை சமநிலையில் நிறுத்துகிறது. இது மேலும் தலைமுடியை மென்மையாக வைத்திருக்க உதவுகின்றது.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். குறிப்பிட்ட அளவில் கற்றாழை சாறு பருகுவது சரியென்றாலும், பக்கவிளைவுகள் உங்களுடைய உடலை பாதிக்காமல் இருக்க உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!