ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நம் உடல் எடையை சீராக வைத்துக்கொள்வது அவசியம். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் நம்மில் பெரும்பாலோனர் உடல் பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. உடற்பயிற்சி என்ற ஒன்றை பெரும்பாலோனோர் மறந்துவிட்டார்கள். அதிகரித்து வரும் உடல் எடையினால் இருதய நோய்கள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு வழிவகுக்கும். உடல் எடை, அதிலும் குறிப்பாக தொப்பையை குறைக்க எளிமையான வழிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
1. கொள்ளு
இதனை ரசமாக, இரண்டு நாளைக்கு ஒரு முறை உட்கொண்டால் தொப்பையைக் குறைக்கலாம். “இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு” என்று ஒரு பழமொழியே இருக்கிறது. உடல் எடையும் இதனால் குறையும்.
2. உப்பு
அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு தொப்பையை குறைக்க தடையாகவும் இருக்கும். ஆகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொண்டால் தொப்பையையும் குறைக்கலாம், உடல் நலத்திற்கும் நல்லது.
3. திரிபலா தூள்
திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கும் இது தீர்வு தரும் மருந்தாகும்.
4. வெந்தயம்
வெந்தயத்தை இரவில் ஊற வைத்து அதன் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பையானது விரைவில் குறைந்துவிடும்.
5. தண்ணீர்
சீரான இடைவெளியில், தினமும் 7 முதல் 8 டம்ளர் வரை தண்ணீர் அருந்துவதால், உடல் வறட்சி இல்லாமல் இருப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். தொப்பையும் குறைந்துவிடும்.
6. நெல்லிக்காய்
காலையில் வெறும் வயிற்றில் நெல்லியை காயாகவோ அல்லது சாறாக குடித்தாலோ தொப்பை விரைவில் குறையும். நம்மை இளமையாக வைத்துக்கொள்ளவும் நெல்லிக்காய் உதவும்.
7. எலுமிச்சை
எலுமிச்சையில் சாறு எடுத்து, ஒரு குவளை வெந்நீரில் கலந்து காலையில் குடித்துவர தேவையற்ற கொழுப்புகள் குறைவதோடு தொப்பையும் குறையும்.
8. ஜங்க் உணவுகள்
ஜங்க் உணவுகளான பர்கர், சிப்ஸ், பிரெஞ்சு ப்ரைஸ், பானி பூரி போன்றவற்றை தவிர்த்தால் தொப்பை குறையும்.
9. சீரகம்
கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். இதனை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புகளால் அதிகரித்த தொப்பையைக் குறைத்துவிடலாம்.
10. பூண்டு
காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் உடலில் தங்கியுள்ள கொழுப்பானது கரைந்து தொப்பையும் குறைந்து விடும்.
11. வைட்டமின் C
வைட்டமின் C சத்து நிறைந்த பழங்களை உண்பதால், உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் வெளியேற்றப்படும்.
12. நடைப்பயிற்சி
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். சைக்கிளிங் செல்வதன் மூலமும் தொப்பை குறைவதோடு உடல் எடையையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.
Note: அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். எந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.