மாதுளை சிறந்த பல ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது. ஒரு கப் மாதுளையில் (174 கிராம்) கீழ்கண்ட அளவிலான சத்துக்கள் அடங்கியுள்ளது:
நார் சத்து: 7 கிராம்
புரதம்: 3 கிராம்
வைட்டமின் சி: 30%
வைட்டமின் கே: 36%
ஃபோலேட்: 16%
பொட்டாசியம்: 12%
பொதுவாக அனைத்து பழங்களிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்களுடன் மாதுளம் பழத்தில் மிகவும் அதிகமாக பயன்கள் உள்ளன. மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழ மரம். ஊட்டச்சத்து நிறைத்த மாதுளம் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

- ஃபைபர், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் தாவர கலவைகள் நிறைந்தவை.
- ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
- இதயம் சம்மந்தமான நோய்கள், புற்றுநோய், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும். ஆல்சைமர் நோய் எனப்படும் நரம்பியல் நோய் மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும்.
- உயிரணுக்களிலும் அழற்சியின் செயல்பாட்டைக் குறைக்கும்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மாதுளை சாறு பயனுள்ளதாக இருக்கும், புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும்.
- மார்பக புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும்.
- இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மாதுளை சாறு பல வகையான மூட்டுவலிக்கு எதிராக பயனளிக்கும்.
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய நோய்களுக்கான முக்கிய காரணியை குறைக்க உதவும். ஒரு ஆய்வில், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 5 அவுன்ஸ் (150 மில்லி) மாதுளை சாற்றை இரண்டு வாரங்களுக்கு (15) உட்கொண்ட பிறகு அவர்களின் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ரத்த அழுத்தம் குறைந்துள்ளது.
- பொதுவாக பற்கள், ஈறுகள் மற்றும் ஈஸ்ட் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாக்டீரியா மற்றும் வைரஸ்க்கு எதிராக செயல்படும்.
- மாதுளையில் நைட்ரேட் நிறைந்துள்ளது. இது உடற்பயிற்சியின் செயல்திறனை மேம்படுத்தும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும், சோர்வு ஏற்படுவதை தாமதப்படுத்துவதாகவும், உடற்பயிற்சியின் திறனை அதிகரிப்பதாகவும் இருக்கிறது. மேலும் உடல் செயல்திறனுக்கு பயனளிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
Also Read: நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 சிறந்த நன்மைகள்…
மாதவிடாய் தள்ளிப் போவதற்கான 10 காரணங்கள்!
‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை’ – இது எந்த அளவிற்கு…