பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான 10 நன்மைகள்..!

Date:

பூசணிக்காய் கொடி இனத்தைச் சேர்ந்தவை. இவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில் அல்சர், நீரிழிவு நோய், கீல் வாதம், உடல் பருமன், சிறுநீர் பாதை நோய் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.

 • அறிவியல் பெயர்: பினின்கேசா ஹிஸ்பிடா (Benincasa Hispida)
 • குடும்பம்: குக்கூர் பிட்டே சியே(Cucurbita cae)
 • வேறு பெயர்கள்: வெண்பூசணி, வேக்ஸ் கார்டு, நீர் பூசணிக்காய், வின்டர் மெலன்

விளையுமிடம்:

சமவெளி மற்றும் மலையடிவாரங்களில் வளர்கின்றன. தெற்கு ஆசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு குளிரில்லாத, ஓரளவு வெப்பமான பருவ நிலை மிகவும் உகந்தது.

இந்தியாவில் அதிகமாக பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் பயிரடப்படுகிறது. இதன் விதைகள் பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்படுகிறது. விதைத்த 90 -ம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம்.

புறஅமைப்பு:

இவை வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் காணப்படும். இவை முதிர்ச்சி அடையாத நிலையில் மெல்லிய ரோமம் போன்று சூழப்பட்டிருக்கும். பழுக்கும் போது இவை மறைந்து விடும். முதிர்ந்த வெண்பூசணியின் மீது வெள்ளை சாம்பல் நிறம் சூழப்பட்டிருக்கும். இதனால் ஆங்கிலத்தில் இதற்கு ஆஷ் கார்டு என்று பெயர்.

கூறுகள்:

Cucurbitine, மையோசின், வைட்டமின் B& C.

ஊட்டச்சத்து மதிப்புகள்:

இவை 96% நீரினால் ஆனவை. 100 கிராம் வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்து மதிப்புகள்.

 •  கலோரி-13 kgal
 • புரோட்டீன்-<1g
 • கார்போஹைட்ரேட்-3g
 • நார்ச்சத்து-3g
 • கொழுப்பு-<1g                                                
 • வைட்டமின்-C-14% of daily value
 • ரிப்போ பிளேவின் (V-B 2)-8% DV
 • கால்சியம்-19 mg
 • செம்பு-6%DV
 • மெக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், காப்பர் ஆகியவை சிறிய அளவில் உள்ளன.

செயல்கள்:

 •  ஆன்டி ஹெல்மின்திடிக்
 • டையூரிடிக்
 • எதிர்ப்பு அழற்சி
 • ஆன்டி கேன்சர்
 • டெமுல்சன்ட்.

பயன்கள்:

 1. இதில் வைட்டமின் C உள்ளது. இவை சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பதால் இவை free radicals, மாசுபடுத்திகள், நச்சுக் கூறுகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது. இவை இதய நோய், புற்றுநோய், கீழ்வாதம், ஆகியவை உருவாவதை தடுக்கிறது.
 2. வெண்பூசணியில் நார்சத்து உள்ளதால் அவை செரிமான மண்டலத்தின் செயலைமேம்படுத்துகிறது. நார்ச்சத்துகள் செரிக்காத உணவு ஆகும்.இவை மலத்தை மிருதுவாக்கி மலக்குடல் வழியாக எளிதில் வெளியேறும் படி செய்கிறது. இதனால் மலச்சிக்கல், மூல நோய், கோலன் கேன்சர் வராமல்  தடுக்கின்றன. அது மட்டுமல்லாமல் உடல் எடை இழப்பிற்கும் உதவுகிறது.
 3. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவற்றில் ரிபோபிளேவின் (வைட்டமின்- B2) உள்ளதால் கண்புரை நோய் வராமல் தடுக்கிறது.
 4. வைட்டமின் – C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி மற்றும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து தடுக்கிறது.
 5. உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற பயன்படுகிறது. பூசணிக்காயில் அதிக அளவு நீர் சத்து நிறைந்திருப்பதால் இவை சிறு நீரைப் பிரிக்கும் பண்பை பெற்றுள்ளன. சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
 6. வைட்டமின் B2 (migraine) ஒற்றைத் தலைவலியின் கால அளவை குறைக்கிறது. ஒற்றைத் தலைவலி வராமலும் தடுக்கின்றது.
 7. வைட்டமின் B2 நரம்பு, மூளை மற்றும் ஹார்மோன்கள் ஆகியவற்றின் சரியான செயல்பாட்டிற்கும் பழுது மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையானவை. இவை ஊட்டச்சத்துகளை ஆற்றலாக மாற்றி உடலிற்கு தேவையான சக்தியை அளிப்பதோடு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை வழங்குகிறது.
 8. ஆராய்ச்சிகளின் முடிவுகளில் போதிய அளவு வைட்டமின் C எடுத்துக் கொள்பவருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 42% குறைவு என்று கூறுகிறது. பூசணிக்காயில் வைட்டமின்C உள்ளதால் இவை பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
 9. இவற்றில் உள்ள குக்கூர்பிடின் ஆன்டி அழற்சி தன்மை கொண்டவை. இவை ஹிஸ்டமைன் உற்பத்தியாவதை தடுக்கிறது.
 10. சாம்பல் பூசணி குளிர்ச்சி தன்மை உடையதால் இவை உடலின் வறட்சியை நீக்கி, வெப்பநிலையை  குறைக்கிறது.

Also Read: டெங்குவை எதிர்க்கும் சித்த மருத்துவம் – கசாயங்களின் நன்மைகள்

சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 சிறந்த நன்மைகள்…

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!