பருவ வயது என்பது உடலில் பலவிதமான மாற்றங்களைச் சந்திக்கும் காலம். ஒரு பருவ வயதினருக்கு வளர கூடுதல் ஊட்டச்சத்து தேவை. இளைஞர்களுக்கு புரதத்தின் தேவை பெரியவர்களிடமிருந்து வேறுபட்டது. பதின்ம வயதினருக்கு தசைகள் கட்டுவதற்கு புரதம் தேவை. அதே போல் அவர்களின் தலைமுடி, தோல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
பெரும்பாலான பதின்ம வயதினர்கள் எப்போதும் பயணத்தில் இருக்கிறார்கள். பல இளைஞர்களுக்கு, சாப்பிடுவது என்பது பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவையே உண்கின்றார்கள். உங்கள் பிள்ளைகளின் நிலைமை அப்படி இருக்கிறதா? உங்கள் பதின் வயதினருக்கான சிறந்த புரத உணவுகளை இந்த பதிவில் காணலாம். இங்கே…
1. தயிர்:

தயிர் புரதத்தின் சிறந்த மூலமாகும். ஒரு பொதி தயிரில் சுமார் 11 கிராம் புரதம் உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் B2, வைட்டமின் B12, பொட்டாசியம், போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.
2. சீஸ்:

சீஸ் பருவ வயதினர்க்கு அதிக சிரமம் இல்லாமல் தரக்கூடிய ஒன்றுதான். சீஸ் குழந்தைகளிடையே பிரபலமானது மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். ஒரு அவுன்ஸ் சீஸ் 7 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. கொழுப்பு,கால்சியம், வைட்டமின் A, வைட்டமின் B12 உள்ளது.
3. பீன்ஸ்:

ஒருவருக்கு, ஒரு கப் உலர் பீன்ஸ் சுமார் 16 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. உங்களுக்கு பிடித்தவகையில் தயார்செய்து பீன்ஸை உணவை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். எலும்பு, தசை, முடி, தோல் மற்றும் இரத்தம் போன்ற புதிய திசுக்களை உருவாக்கவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து.
4. பருப்பு:

பருப்பு வகைகள் உலகில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். ½ ஒரு கப் பயறு வகைகளில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது.
5. வேர்க்கடலை வெண்ணெய்:

வேர்க்கடலை வெண்ணெய் பிடிக்காத ஒரு இளைஞனைக் கண்டுபிடிப்பது கடினம். வேர்க்கடலை வெண்ணெய் பரிமாறும்போது 8 கிராம் புரதம் உள்ளது. வைட்டமின் B, வைட்டமின் B6 உள்ளது.
6. இறைச்சி:

மூன்று அவுன்ஸ் இறைச்சி 21 கிராம் புரதத்தை வழங்குகிறது. இதில் உடலுக்கு தேவையான அயோடின், வைட்டமின்B6, இரும்புசத்து உள்ளது.
7. மீன்:

மீன்கள் புரதத்தின் மற்றொரு சத்தான மூலமாகும். மீனில் 15 கிராம் முதல் 30 கிராம் புரதம் உள்ளது. மீனில் கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் B2, வைட்டமின் D உள்ளது.
8. கோழி:

கோழி என்பது பெரும்பாலும் பிடித்த ஒன்றுதான். எனவே, ஆரோக்கியமான கோழி உணவுகளை உட்கொள்வதில் உங்களுக்கு அதிக சிரமம் இருக்காது. கோழியில் சுமார் 27 கிராம் புரதம் உள்ளது.
9. முட்டை:

முட்டை சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் மற்றும் வைட்டமின்கள் உள்ளது.
10. பால்:

தினமும் ஒரு கிளாஸ் பால் பருகலாம். ஒரு கிளாஸ் பாலில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது. பொட்டாசியம், பி 12, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது.
Also Read: இரும்பு சத்து குறைபாடு: பருவ வயதினருக்கான இரும்பு சத்து நிறைந்த உணவுகள்!
உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்து நிறைந்த 9 உணவு வகைகள்
வைட்டமின் சி குறைபாடு: இந்த 7 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா?