‘சன் டூங்’ வியட்நாமின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இந்த குகை. இது காடுகளுக்குள் மறைந்துள்ளது. சன் டூங் குகை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நீரினால் அரிக்கப்பட்ட தளம், சில இடங்களில் குகையின் உயரமானது 200 மீட்டர் வரை உயர்ந்து இருக்கிறது. அந்த இடைவெளிகளில் 40 அடுக்குமாடி கொண்ட வானளாவிய கட்டிடங்களைக் கூட கட்டிவிட முடியும். அவற்றின் சில படங்கள் இங்கே:

இந்த குகை மொத்தம் 9 கி.மீ. நீளமானது. சுமார் 150 தனித்தனி குகைகளையும் உள்ளடக்கியது. ஆங்காங்கே சில அடர்த்தியான காடுகளையும், பல ஆறுகளையம் இது உள்ளடக்கியது.

உலகின் மிகப் பெரிய குகைக்குள், இருள் அடர்ந்த வழியாக ‘ஹோ மின் ஃபூக்’ என்ற இந்த நபர் செல்லும் பாதையின், மேலே பல மாடி கட்டிடங்களின் அளவு பாறை வடிவங்கள் உயர்ந்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்டதிலேயே இது ஒரு பெரிய குகை. இது தனக்கென உண்டான சுற்றுச்சூழல் மற்றும் வானிலை சூழல் முறைகளைக் கொண்டுள்ளது.

பறக்கும் நரிகளின் வாழ்விடமாக விளங்குகின்றது. 2013 ஆம் ஆண்டில் மிகவும் குறைந்த அளவிலான சுற்றுலாவுக்கு திறக்கப்பட்டது முதல், இதனை சுற்றியுள்ள சமூகத்தின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

சன் டூங் குகை வறுமையில் வாடிவரும் இளைஞர்கள், ஃபோங் நா-கே பேங் தேசிய பூங்காவின் (Phong Nha-Ke Bang National Park) பின்புற மரங்களை சூறையாடி வருகின்றார்கள்.

மத்திய குவாங் பின் மாகாணத்தில் உள்ள சன் டூங் குகை முதன்முதலில் உள்ளூர்வாசியான ஹோ கான் என்பவரால் 1991-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் ஒரு சுண்ணாம்புக் பாறையை தகர்த்தபோது, உள்ளே ஆழமாக ஒரு ஆற்றில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது.

கான், 2009 இல் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களின் குழுவை அழைத்து வந்தார். அவர்கள் இந்த உலகின் மிகப்பெரிய குகையாக இதனை அறிவித்தனர்.

குகையில் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் ஆக்சாலிஸ் நிறுவனம் (Oxalis travel company), “கிரகத்தின் பெரும்பாலான இடங்களில் மிகப் பெரிய குறுக்குவெட்டு உள்ளது. ஒரு முழு நியூயார்க் நகரத்தின் 40 மாடி வானளாவிய கட்டிடங்களை வைக்கும் அளவுக்கு பெரியது” என்று தெரிவிக்கின்றது.

யுனெஸ்கோ சமீபத்தில் சவால்களுக்கு இந்த குகையில் பஞ்சமில்லை என்று எச்சரித்தது. சட்டவிரோதமாக சிலர் இந்த குகையினுள் நுழைவது ஒரு பிரச்சினையாக உள்ளது.

கடந்த ஆண்டு தேசிய பூங்காவில் மரங்களை வெட்டியதாக 18 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 உலகம் முழுவதும் பரவியதால், சுற்றுலா பார்வையாளர்களுடன், இங்கு பணிபுரியும் உள்ளூர்வாசிகளும் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உள்ளூர் சமூகத்திற்கு சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதாக, குகை சுற்றுலா நிறுவனமான ஆக்ஸலிஸ் கூறுகின்றது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அதிகாரிகளின் ஆர்வத்தை இது ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

தொற்றுநோய் இன்னும் முற்றிலும் ஒழியாத நிலையில், தொற்றுநோய் நாடு முழுவதும் அணுகுமுறைகளில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தொழில் வல்லுநர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.