புகாட்டி (Bugatti)! இந்த நிறுவனம் விலை உயர்ந்த காரைத் தயாரிக்கிறது என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய செய்தி இல்லை. காரணம், அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து கார்களுமே அப்படித்தான். அந்த நிறுவனம் தயாரித்த புத்தம் புதிய கார் லா வோய்ச்சர் நோய்ரே (La Voiture Noire). இதன் விலை ரூ. 132 கோடி/-. தற்போதைய நிலவரப்படி உலகின் விலை மதிப்பு மிக்க கார் இது தான்.
வாருங்கள் விலையுயர்ந்த காரின் புதிய படங்களை இங்கே காணலாம்.

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த புகாட்டி La Voiture Noire. | Credit: Reuters

புகாட்டி La Voiture Noire மேலழகு! | Credit: Bugatti

புகாட்டி La Voiture Noire காரின் வடிவான முன்னழகு! | Credit: Bugatti

எழில்மிகு கோணத்தில் வாவ் சொல்ல வைக்கும் புகாட்டி La Voiture Noire கார். | Credit: Bugatti

நம்மை வாட்டும் பக்கவாட்டு தோற்றம், புகாட்டி La Voiture Noire காருடையது தானே | Credit: Bugatti

புகாட்டி La Voiture Noire காரின் தொடர்ந்து வரச் சொல்லும் பின்னழகு! | Image: Bugatti

புகாட்டி La Voiture Noire காரின் கண்ணைக்கவரும் மேலழகு! | Credit: Bugatti

புகாட்டி La Voiture Noire -ன் காலழகு! அதாங்க… உருக்கு சக்கர வட்டு (Alloy Wheel) இதன் அழகே நிச்சயம் உங்களை உருக்கும் | Image: Bugatti

மற்றொரு கோணத்தில் புகாட்டி La Voiture Noire காரின் மேலழகு! | Image: Bugatti
எல்லாம் ரொம்ப அழகு தான்… அது சரி! இந்த காரின் பெயருக்கு அர்த்தம் என்ன என்று கேட்கிறீர்களா?
La Voiture Noire, “லா வோய்ச்சர் நோய்ரே” என்றால் கருப்பு கார் என்று அர்த்தமாம்.
கருப்பு காரே இவ்வளவு அழகா இருக்கும் போது, கருப்பாக இருக்கும் நாமும் அழகு தானே…
இதெல்லாம் இப்படியிருக்க மற்றொரு பக்கம் காரே விற்பனையாகாமல் துருப்பிடிக்கும் லட்சக்கணக்கான கார்களின் படங்களையும் இங்கே காணுங்கள்.
கைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்!!
கருப்பு காரோட அழகில் சொக்கியிருந்தால், சொக்கியது முன்னழகிலா அல்லது பின்னழகிலா என்பதை தவறாமல் கீழே கமெண்ட் போடுங்க!