பனிக்கட்டி நிரம்பிய சாலைகள், பெரும்பாலான பகுதிகளில் மின் தடைகள் மற்றும் ஆபத்தான குறைந்த வெப்பநிலை ஆகியவை பல மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதித்திருக்கின்றன. அவற்றில் சில கடுமையான நிலைமைகளுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த மோசமான வானிலையால் நாடு முழுவதும் 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் மின்சார சேவை லாரிகள் வரிசையில் நிற்கும் காட்சி.

ஜார்ஜ் சன்ஹுவேஸா-லியோன், தனது சமையலறையில் உள்ள எரிவாயு அடுப்பு மீது கால்களை சூடேற்றுவதற்காக நிற்கிறார்.

வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே சென்ற நிலையில், நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் நீராவியின் வழியாக சூரிய ஒளி வரும் காட்சி.

ஒரு மளிகைக் கடைக்குள் நுழைவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், அருகில் ஓய்வெடுக்கும் உடன் வந்த பெண்.

சிகாகோவில் குடியிருப்பாளர்கள் நடைபாதையில் இருந்து பனியைத் அப்புறப்படுத்தும் காட்சி.

டல்லாஸில் உள்ள ஒரு மளிகை கடையில் வாடிக்கையாளர்கள் செல்போனில் இருந்து வெளிச்சத்தைப் பயன்படுத்துகிறார்கள். கடையில் மின்சாரம் இல்லாத நிலையில், அங்கு பணம் கொடுத்து மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில்.

ஓஹியோவின் கொலம்பஸில் அதிகாலையில் பனியை அகற்றும் வாகனம்.

கன்சாஸ் நகரில் பனி உறைந்த மிசோரி ஆற்றிலிருந்து மேலெழும் நீராவி .

இண்டியானாபோலிஸின் சாலையில் பனி படர்ந்த நிலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனத்தை செலுத்தினார்கள்.

டெக்சாஸின் ஆஸ்டின் பகுதி முழுவதும் பனி போர்வையாக மூடியிருக்கும் காட்சி.

டெக்சாஸின் மிட்லாண்டில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் ஒன்றில் ஒட்டியிருந்த பனி உருகி விழும் நிலையில்.

டென்னசி மாகாணத்தில், உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்கள் பனியை அகற்றுகின்றன.

ஓக்லஹோமா நகரத்தின் வீதிகளில் இருந்து அகற்றப்பட்ட பனியை மற்றோர் இடத்தில கொட்டுகிறார்கள்.

டெக்சாஸின் ஆஸ்டினில், ஒரு பனி நிறைந்த சாலையில் மக்கள் நடந்து செல்கின்றனர்.

வாஷிங்டன், டகோமாவில் பனி பொழிவில் பயணிக்கும் கார்கள்.

Also Read: முன்னெப்போதும் இல்லாத அளவு வேகமாக உருகும் ஆர்டிக் பனிப்பாறைகள்: என்னென்ன அபாயங்கள்…
திடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்!