அரிதான வெள்ளை கலைமான் – அழகான புகைப்படங்கள்

Date:

மிகவும் அரிதான வெள்ளை கலைமான் கன்று ஒன்று நார்வே நாட்டில் சமீபத்தில் தென்பட்டுள்ளது. ஒரு புகைப்படக் கலைஞர் அந்த மானை புகைப்படங்கள் எடுத்த போது அந்த மான் அமைதியாக நின்றுள்ளது. இப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

Rare white reindeer
Credit: Globalnews

நார்வே நாட்டின் ஒஸ்லோ (Oslo) நகரத்தைச் சேர்ந்த மேட்ஸ் நார்ட்ஸ்வீன் (Mads Nordsveen) என்ற 24 வயது புகைப்படக் கலைஞர், நார்வேயில் உள்ள செஞ்சா (Senja) தீவில் அவரது நண்பர்களுடன் நடைபயணம் மேற்கொண்ட போது தென்பட்ட அரிதான வெள்ளை நிற கலைமானை  புகைப்படம் எடுத்துள்ளார்.

வெள்ளை கலைமான்களின் மரபணுக்களில் ஏற்படும் திடீர்மாற்றம் தான் அவற்றின் இந்த வெள்ளை நிறத்திற்குக் காரணம்.

இது குறித்து அவர், “அந்த மான் பனியின் நிறத்தில் பனியோடு கலந்து  இருந்தது. அது ஒரு சிறந்த தருணம். நாங்கள் அதனைக் கண்டு ஸ்தம்பித்து விட்டோம். புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற என் உள்ளுணர்வு எனக்குத் தோன்றவே சில நொடிகள் ஆனது என்று கூறியுள்ளார். மேலும் அதன் கண்கள், கொம்புகள் இல்லையென்றால் அது ஒரு பனி மேடு என்றே நினைத்திருப்போம்.முதலில் அந்த மான் பதற்றமாகத் தென்பட்டாலும் நாங்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்த பின்பு அதுவும் அமைதியாக இருந்தது. அதன் பின்பு எடுத்த புகைப்படங்களுக்குக் கூட அமைதியாக நின்றது. பழுப்பு நிறத்தில் அதன் தாய் மான் கொஞ்சம் தொலைவில் நின்று கொண்டிருந்த நிலையில் சில நிமிடங்களுக்கு பின் அது அதன் தாயுடன் சேர்ந்து காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டது” என்று கூறியுள்ளார்.

Rare white reindeer
Credit: Yowbuzz

மேலும் எடுத்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு வெள்ளை மான் ஒன்று வடக்கு ஸ்வீடனில்  உள்ள ஒரு சாலையில் தென்பட்டுள்ளது. அதன் பிறகு இப்போது தான் தென்பட்டுள்ளது.

வெள்ளை நிற கலைமான்களின் மரபணுக்களில் ஏற்படும் திடீர்மாற்றம் (Genetic mutation) தான் அவற்றின் இந்த வெள்ளை நிறத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த மக்களை பொறுத்த வகையில் இது போன்ற வெள்ளை மிருகங்கள் தென்படுவது மிகவும் அரிது. மேலும் வெள்ளை கலைமான் இனம் தனித்தன்மை வாய்ந்தது. அதோடு அவை மகிழ்ச்சியின் அடையாளம் என்றும் அவர்கள்  நம்புகின்றனர்.

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!