28.5 C
Chennai
Friday, September 18, 2020
Home அரசியல் & சமூகம் : நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடந்த 'Black Lives Matter' போராட்டங்கள்!

[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடந்த ‘Black Lives Matter’ போராட்டங்கள்!

தவறு செய்து இன்று பெயர் வாங்கலாம்.. புகழ் பெறலாம்... ஆனால், வரலாறு அதை ஒரு நாள் திருத்தி எழுதும் என்பதற்கு இந்த போராட்டங்கள் நிகழ்கால எழுத்துக்காட்டு.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

உலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்லாய்ட் என்ற 40 வயது மதிக்கத்தக்க ஆப்பிரிக்க-அமெரிக்கர் மனிதர் ஒருவரை, அமெரிக்க போலீஸ் செய்யாத குற்றத்திற்காக தவறான முறையில் படுகொலை செய்தது.

இந்நிலையில், அமெரிக்கர்களின் பொதுப்புத்தியான நிறவெறி தான் இதற்கு காரணம் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல் என அனைத்து நாடுகளிலும் மக்கள் கூட்டமாக திரண்டு அவரது படுகொலைக்கு நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

மேலும், இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக விற்று, பிழைப்பு நடத்தி கொழுத்த பலரது சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பின மக்களே திரண்டு மீண்டெழுந்து நடத்தி வரும் இந்த போராட்டங்கள் பிரிட்டனை அசைத்துப்பார்த்திருக்கிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க Black Lives Matter (BLM) போராட்ட புகைப்படங்களின் தொகுப்பு இங்கே…

1650-1720 ம் ஆண்டுகளில் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்று பிழைத்த Edward Colston சிலையை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரத்திலிருந்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி கீழே தள்ளிவிட்ட காட்சி
Credits: GettyImages
300-400 ஆண்டுகளுக்கு பிறகு கறுப்பின மக்கள் திரண்டெழுந்து Edward Colston சிலையை ஆற்றுக்குள் தள்ளிவிட்டனர். Credit: PA Media
இங்கிலாந்து முன்னாள் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் சிலையை லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டக்காரர்கள் கடுமையாக சேதப்படுத்தினர். இவர் ஒரு இனவெறியாளராக இருந்தார் என்று அவரது சிலைக்கு கீழ் எழுதப்பட்டுள்ளது
Credits: GettyImages
போராட்டக்காரர்களுக்கு பயந்து Oriel கல்லூரி வளாகத்தில் இருக்கும் சிசில் ரோட்ஸ் என்பவரின் சிலை தடுப்பு போடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
Credits: GettyImages
நிறவெறி ஆட்சியாளர் சிசில் ரோட்சின் சிலை கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் Oriel கல்லூரிக்கு வெளியே கடுமையான போராட்டம் நடத்தினர்.
Credits: GettyImages
கிழக்கு லண்டனில் இருக்கும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த, அடிமைகளை வைத்து வியாபாரம் செய்த Robert Milligan சிலை அகற்றப்படுகிறது
Credits: GettyImages

அடக்குமுறைக்கு எதிராக போராடி 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதை! இன விடுதலையின் தந்தை நெல்சன் மண்டேலா!!

18ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மதபோதகர் David Hume வெள்ளையர்களை விட நீக்ரோக்கள் இயற்கையாகவே கீழானவர்கள் என்று கூறி இருந்தார். அதை அம்பலப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் அவர் எழுதிய வாசகத்தை அவரது சிலையின் கீழ் வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
Credits: GettyImages
பதினெட்டாம் நூற்றாண்டில் அடிமை ஒழிப்புச் சட்டத்துக்கு எதிராக அரசாங்கத்திலிருந்து வேலை பார்த்த ஸ்காட்லாந்து அரசியல்வாதி Henry Dundasஇன் சிலையை அகற்ற போராட்டக்காரர்கள் ஆன்லைன் மூலம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்
Credits: GettyImages
அடிமை முறையை ஒழித்து விட்டால் நமக்கு வேலை ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறிய முன்னாள் இங்கிலாந்து கடற்படை தளபதி Admiral Horatio Nelson இன் சிலை இது. இந்த சிலையை அகற்றவேண்டும் என்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர் போராட்டக்காரர்கள்.
Credits: GettyImages

கால்பந்து உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் இந்த ஆப்பிரிக்க இளைஞர் – பீலேவை நினைவுபடுத்தும் எம்பாப்பே!

இங்கிலாந்தின் பிரதமராக 5 முறை பதவி வகித்த 18ஆம் நூற்றாண்டில் பல நூறு பேரை அடிமைககளாக தன் வேலைக்கு வைத்திருந்த William Gladstone சிலை இது. இதனையும் அகற்ற போராட்டக்காரர்கள் வேலை செய்து வருகின்றனர்
Credits: GettyImages
கருமை அழகு எந்த ஒரு நேரத்திலும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதற்காக எப்போதும் ‘கருமை அழகுதான்’ என்ற வாசகத்தை தங்கிய உடையை அணிந்து செல்லும் போராட்டக்காரர்
Credits: GettyImages

இரண்டாம் உலகப் போரின் போது எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள்!

George Floyd கொல்லப்பட்ட போலீஸ்காரரின் காவல் நிலையத்திற்கு எதிராக ஆப்பிரிக்க இனக் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Credits: GettyImages
இரவு போராட்டம் முடிந்த பின்னர் தாங்கள் ஏந்தி வந்த அட்டைகளை ஓரிடத்தில் வைத்துள்ளனர்
Credits: GettyImages
நிறவெறிக்கு துணையாக இருந்தார் என்று கூறி போராட்டக்காரர்கள் சேதப்படுத்திய ஆபிரகாம் லிங்கனின் சிலையை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அரசு அதிகாரி ஒருவர்
Credits: GettyImages

மே 1 ஏன் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது?

லண்டன் குளோபல் டிரேட் நிறுவனத்தை நிறுவி மேற்கிந்தியா பக்கம் பயணம் செய்து மக்களை அடிமைகளாக வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திய Robert Milligan சிலையில் போராட்டக்காரர்கள் வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர்
Credits: GettyImages

தவறு செய்து இன்று பெயர் வாங்கலாம்.. புகழ் பெறலாம்… ஆனால், வரலாறு அதை ஒரு நாள் திருத்தி எழுதும் என்பதற்கு கறுப்பின மக்கள் திருப்பி அடிக்கும் இந்த போராட்டம் நிகழ்கால எடுத்துக்காட்டு. ‘உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒரு நாள்‘ என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது.

தமிழ் நாட்டிலும் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் பலரது சிலைகள் இருக்கின்றன. அவர்களது பெயர் சூட்டப்பட்ட சாலைகள் இருக்கின்றன. சிலைகளை அப்புறப்படுத்திவிட்டு, சாலைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -
error: Content is copyright protected!!