எப்போதும் பல்வேறு நாடுகளில் இருந்து துலிப் மலர்கள் பூத்துக்குலுங்கும் அற்புதக்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக நெதர்லாந்தில் உள்ள ஹாலந்தை நாட்டை நோக்கி பயணிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அப்படியல்ல. 70 லட்சம் டுலிப்ஸ் மலர்கள் மலர்வதைக் காண இந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை. காரணம், நாவல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செய்யப்பட்ட ஊரடங்கு தான்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் நடுப்பகுதியில் பூக்கும் துலிப்ஸ் மலர்கள் மற்றும் தோட்டங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கும். அந்த தோட்டங்கள், சுமார் 1,500 க்கும் மேற்பட்ட வகைகளில் 70 லட்சத்துக்கும் அதிகமான பூக்களால் நிரப்பப்பட்டிருக்கும். இந்த ஆண்டும் அப்படித்தான் இருந்தது. ஆனால் வெளிநாட்டு பார்வையாளர்கள் தான் இல்லை. இந்நிலையில் மே 10 அன்று சீசன் முடிவுக்கு வந்தது.
ஹாலந்து நாட்டில் இருந்து வந்திருக்கும் அசர வைக்கும் புகைப்படங்களை உங்களுக்கு இங்கே வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த துலிப்ஸ் தோட்டங்கள் பல வண்ணங்களில் கடல் போல் காட்சியளிக்கின்றன. அங்கு வானவில் போன்ற வரிசைகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களில் பூக்கள் மனதை மயக்கும் இவை கனவுலகை கண்முன் நிறுத்துபவை.











Also Read:
நடுக்கடலில் மிதக்கும் சொகுசு விடுதி: கண்ணைக் கவரும் புகைப்படங்கள்
சூரிய ஒளி அருவியில் பட்டதும் எரிமலைக் குழம்பாக மாறும் அதிசயம் – மெய்மறக்க வைக்கும் புகைப்படங்கள்
ஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்! கண்கவர் படத்தொகுப்பு!
ஐரோப்பாவின் தோட்டம் என்றும் அழைக்கப்படும் Keukenhof Garden இந்த ஆண்டு அதன் யூடியூப் சேனலில் ஏப்ரல் தொடங்கி மே 10 வரை இந்த ஆண்டு சீசன் முழுவதும் பூக்கள் பூப்பதை 23 வீடியோக்களின் மூலம் காட்டியது.
மேலும் பட புகைப்பட கட்டுரைகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.