உலகிலேயே அதிகமான அளவில் நறுமணப் பொருள்களை உற்பத்தி செய்வதும், ஏற்றுமதி மற்றும் நுகர்வோர்கள் பயன்பாடுகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. International Organization for Standardization (ISO) வெளியிட்டுள்ள நறுமணப்பொருட்களின் பட்டியலில் உள்ள 109 வகையான பொருட்களில் 75 வகை நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது “குங்குமப்பூ”. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் குங்குமப்பூவை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. உலகிலேயே குங்குமப்பூ உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. காஷ்மீர் பகுதியில் உலகின் மிக விலையுயர்ந்த குங்குமப்பூவை விவசாயிகள் எவ்வாறு அறுவடை செய்கின்றார்கள் என்று பார்க்கலாம்.
குங்குமப்பூ
ஸ்ரீ நகருக்கு தெற்கே உள்ள பாம்பூரில் உள்ள ஒரு வயலில் குங்குமப்பூ பூத்திருக்கும் காட்சி.

குங்குமப் பூக்கள் சேகரிப்பு
விவசாயி ஒருவர் பாம்பூரில் உள்ள தங்கள் வயலில் இருந்து குங்குமப் பூக்களை சேகரிக்கிறார்.

குங்குமப் பூவிலிருந்து மகரந்தத்தை பிரித்தெடுத்தல்:
பாம்பூரில் குங்குமப்பூ அறுவடையின் போது காஷ்மீர் விவசாயிகள் குங்குமப்பூவிலிருந்து மகரந்தத்தை பிரித்தெடுக்கும் காட்சி.

குங்குமப்பூ பறித்தல்:
தங்கள் வயலில் இருந்து குங்குமப்பூக்களை பறித்தெடுக்கும் விவசாயி.

Also Read: [புகைப்பட தொகுப்பு]: ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கும் 70 லட்சம் துலிப் மலர்கள்!!
உழைப்பு:
குங்குமப்பூவை வயலில் இருந்து அறுவடை செய்வது முதல் பேக் செய்வது வரை மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது.

குங்குமப்பூ இதழ்கள்:
பாம்பூரில் உள்ள ஒரு பண்ணையில் பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட குங்குமப்பூவின் மகரந்தக் குவியல்.

அறுவடை செயல்முறை:
இதன் தனித்துவமான சுவை, வாசனை மற்றும் வண்ணம், ஆகியவற்றால் இது உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப்பொருளாக இருக்கிறது.

குங்குமப்பூ பயன்பாடு:
உலகெங்கிலும் பெரும்பாலான சமையலறைகளில் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

Also Read: பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள் – சுற்றுலா விரும்பிகள் தயாரா?
மருத்துவ நோக்கங்கள்:
குங்குமப்பூ மருத்துவ நோக்கங்களுக்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவது இடம்:
இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர், இந்தியாவில் குங்குமப்பூவை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. உலக அளவில் குங்குமப்பூவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் 2 வது நாடு இந்தியா.

உலகின் முன்னணி நாடு:
உலகில் குங்குமப்பூ அதிக அளவில் உற்பத்திசெய்யும் நாடு ஈரான்.

சுகாதார நலன்கள்:
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
