தமிழகத்தில் மினியேச்சர்கள் செய்பவர்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இளைஞர் சுகுமார். 22 வயதாகும் சுகுமார், பொறியியல் பட்டதாரி. ‘லாக்டவுன்’ காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாததால், மினியேச்சர்கள் செய்யத்துவங்கியுள்ளார். அவர் செய்த மினியேச்சர்கள் அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த மினியேச்சர்கள் செய்ய யாரிடமும் அவர் கற்கவில்லையாம். சொந்த முயற்சியினால், துவங்கிய பணி இன்று பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.




அவர் செய்த மினியேச்சர்களில் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், லாரி, ஜீப், சுமோ, ஆம்னி பேருந்து, இருசக்கர வாகனம், ஆட்டோ, மாட்டுவண்டி போன்ற அனைத்து அடங்கும். இதில், மாட்டு வண்டி செய்தித் தாளில் செய்து முடித்துள்ளார்.
அவர் செய்துள்ள ராமர் கோயில் மட்டும் தெர்மாகோலில் செய்யப்பட்டுள்ளது. இதில் 360 தூண்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மினியேச்சர், செய்து முடிக்க 25 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. தத்ரூபமான இந்த படைப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதைத் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தையும் பாஃர்ம் சீட் மூலம் செய்து முடித்துள்ளார். இதில், நீங்கள் கற்பனை செய்வது போன்று ஸ்ப்ரே பெயிண்ட் பயன்படுத்தபடவில்லை. முழுவதும் ஜன்னல் கம்பிகளுக்குப் பயன்படுத்தும் பெயிண்ட்களையே சுகுமார் பயன்படுத்தியுள்ளார்.



இதில், ஒவ்வொரு பொருட்கள் செய்து முடிக்கவும் சுகுமாருக்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. ஆனால், அவரது பொறுமையே இந்த பொருட்கள் முழுவடிவம் பெறுவதற்கான சான்று என்று கூறலாம். அதில் ராமர் கோயில் செய்து முடிக்க 25 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. மற்ற பேருந்துகள் வாகனங்கள் செய்து முடிக்க 8லிருந்து 10 நாட்கள் வரை தேவைப்படுவதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.








கொரோனா லாக்டவுன் எதையும் செய்யவிடவில்லை என்றாலும், இது போன்ற திறமைகளை வெளிக்கொணர உதவியுள்ளது என்பதே நிதர்சனம்
Also Read: வெறும் பேப்பரில் இப்படியெல்லாம் செய்யலாமா? காகிதத்தில் கலைவண்ணம் கண்ட ஜப்பானியர்களின் ‘ஓரிகாமி’!