இந்தியாவின் முதல் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய இக்லூ கஃபே, காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ள கோலாஹோய் கிரீன் குழும ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் (Kolahoi Green Group of Hotels and Resorts ) நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இது ஒரு புது வகையான அனுபவமாக அமைந்திருக்கின்றது.

காஷ்மீரின் குல்மார்க் ஒரு பிரபலமான பனிச்சறுக்கு இடமாகும். இது பிர் பஞ்சால் பகுதியில் (Pir Panjal) அமைந்துள்ளது.

உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தருவதற்காக இந்த இக்லூ கஃபேயை கட்டியதாக இதன் நிறுவனர் வசீம் ஷா கூறினார்.

இக்லூஸ் பொதுவாக பின்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற குளிர்ந்த இடங்களில் காணப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கு இது புதியது.

காஷ்மீரின் குல்மார்க் சுற்றுலா மற்றும் ஸ்கை ரிசார்ட்டில், பனியால் செய்யப்பட்ட இக்லூவுக்குள் சுற்றுலாப் பயணிகள் தேநீர் அருந்துகிறார்கள்.

இக்லூ, 22 அடி அகலமும் 12.5 அடி உயரமும் கொண்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 16 நபர்கள் அமர்ந்து உண்பதற்கு ஏற்ற வகையில் இது அமைந்துள்ளது.

இக்லூ கஃபே, டேபிள்கள் மற்றும் இருக்கைகள் பனியால் செய்யப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு அரவணைப்பையும் வெதுவெதுப்பான தன்மையையும் அளிக்க, ஒவ்வொரு பனி இருக்கைகளிலும், ஒரு செம்மறி தோல் போர்த்தப்பட்டுள்ளது.

பனியால் செய்யப்பட்ட ஒரு இக்லூவுக்குள் விளையாடும் குழந்தைகள். இந்த இக்லூவை உருவாக்க சுமார் 15 நாட்கள் ஆனது.



விளக்குகள் வைத்திருப்பதற்காக சிறிய அளவிலான டேபிள்களும் உள்ளன. இதுவும் பனியால் செய்யப்பட்டுள்ளது.