கோடம்பாக்கத்தில், பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி, அங்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டு தனக்கான ஸ்டூடியோவாக மாற்றியுள்ளார் இசைஞானி. இசை ராஜாவின் இசைப்பயணம் இனி இங்கிருந்துதான் நடைபெறும். சுமார் 40 ஆண்டுகளாக இருந்து வந்த பிரசாத் ஸ்டுடூயோவுடனான பந்தம் முடிவுக்கு வந்த நிலையில் இந்நிகழ்வு இசைஞானி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.
புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்டூடியோவில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடல் முதல் பாடலாக உருவாகஉள்ளது. 75 வயதைக் கடந்த ஒருவர், தன்னால் புதிதாக ஒரு ஸ்டூடியோவை உருவாக்கி, எத்தனை இடையூறுகள் வந்தாலும் தனது வெற்றிப் பயணத்தை தொடர முடியும் என இறங்கி இருப்பது, இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் தரக்கூடிய ஒன்று. இளையராஜாவின் இசைப்பணி இனிதே சிறக்கட்டும். ஸ்டூடியோவின் புகைப்படங்கள் சில இங்கே:








