நாம் வாழும் உலகம் எவ்வளவு அழகானது என்பதை நாம் கண்கள் மூலமே நாம் அறிந்து கொள்ள முடியும். மனிதனின் கண்களால் 10 மில்லியன் அளவுள்ள வெவ்வேறு வண்ணங்களை வேறுபடுத்த முடியுமாம்.
மற்றைய உயிரினங்களின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கும்? எடுத்துக்காட்டாக ஒரு நாயின் பார்வையில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அல்லது ஒரு தேனீ இந்த உலகை எப்படிப் பார்க்கிறது? பூமியில் உள்ள ஒவ்வொரு வகையான விலங்குகளின் பார்வையும் தனித்துவமானது. விலங்குகள் அவற்றைச் சுற்றியுள்ள உலகை எவ்வாறு பார்க்கின்றன என்பதை இங்கே நாம் பார்க்கலாம். கீழே உள்ள புகைப்படங்களில் மேலுள்ள காட்சி மனிதனின் கண்கள் வழி காட்சி. கீழுள்ள படம் அந்தந்த விலங்கு, பறவைகளின் கண்கள் வழியேயான காட்சி.
1. பச்சோந்தி
பச்சோந்திகள் சுவாரஸ்யமான உயிரினங்கள், அவற்றின் தோற்றத்தால் மட்டுமின்றி அவற்றின் கண்களும் தான். இதன் கண்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சுழல முடியும். இது அவர்களுக்கு 360º பார்வையை வழங்குகின்றது.

2. மரப்பல்லி
பல்லிகளால் இரவில் நன்றாக பார்க்க முடியும். இரவில் மனிதர்களால் பார்க்க முடிந்ததை விட 350 மடங்கு சிறப்பாக இவற்றால் பார்க்க முடியும்.

3. நாய்
நாய்களுக்கு பார்வை திறன் குறைவு. நாய்களால் உலகை சற்றே மங்கிப்போன வகையில் தான் பார்க்க முடியும். அவற்றின் கண்களால் பெரும்பான்மையான வண்ணங்களை வண்ணமாக காண இயலாது. அவற்றால் இரவில் நன்றாக பார்க்க முடியும்.

4. மீன்
உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண மீன் தொட்டியில் வசிக்கும் மீன்களால் புற ஊதாக்கதிரின் மின்காந்த நிழற்பட்டையின் வகைகளில் ஒன்றான “கிட்ட புறஊதா” முறையில் பார்க்க முடியும். இவ்வழி அருகில் உள்ள அனைத்தும் பெரிதாக தெரிகின்றன. அதனால்தான் பல மீன்கள் எல்லா நேரத்திலும் ஆச்சரியமாக ஏதாவது செய்கின்றன.

5. பறவைகள்
பறவைகள் கூர்மையான பார்வை கொண்டவர்கள். இரவில் மட்டுமே வெளிவரும் பறவைகளால் வெளிச்சம் இல்லாதபோதுகூட நன்றாக காண முடியும். மேலும் பகலில் மனிதர்களால் காண முடியாத வண்ண நிழல்களையும், புற ஊதா கதிர்களையும் பறவைகளால் காண முடியும்.

6. எலிகள்
ஒரு எலியின் கண்கள் ஒவ்வொன்றும் இருவேறு காட்சியை காண இயலும். எனவே அவை இரண்டு தனித்தனி படங்களைக் காண்கின்றன. அவற்றின் கண்களில் உலகம் மங்கலாக நீலம் கலந்த பச்சை நிறமாகவும் தெரியும். மெதுவாகவே கண்களில் நகரும்.

7. மாடுகள்
மாடுகளுக்கு, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள் பச்சை நிறத்தில் இருந்தாலும், அவற்றின் கண்களுக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் தோன்றும். ஆனால் எல்லாவற்றையும் சற்று பெரிதாக காட்டும்.

8. குதிரை
தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது. குதிரையின் கண்கள் அதன் தலையின் பக்கத்தில் அமைந்திருக்கின்றன. இதனால் ஒருபோதும் மூக்கின் முன் உள்ளவற்றை பார்க்க இயலாது. குதிரைகளுக்கு நிறக்குருடு இருப்பதால்தால் இரு நிறங்கள் மட்டுமே தெரியும்.

9. தேனீக்கள்
தேனீக்கள் மனிதர்களை விட மூன்று மடங்கு வேகமாக உலகைப் புரிந்துகொள்கின்றன. நம்மால் இயலாத புற ஊதா கதிர்களையும் தேனீக்களால் காண முடியும்.

10. ஈக்கள்
ஈக்களால் புறஊதா கதிர்களை காண முடியும். மனிதர்களோடு ஒப்பிடுகையில் காட்சிகள் இவற்றிற்கு மெதுவாகவே தோன்றும். ஒவ்வொரு கண்ணிலும் ஆயிரக்கணக்கில் நுண்கண்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. இவை அனைத்து நுன்கண்களாலும் ஒருங்கிணைத்தே ஒரு காட்சியை இவற்றால் பார்க்க முடியும். ஈயால் பகலில் பார்க்க முடியுமே தவிர இரவில் எதையும் பார்க்க இயலாது.

11. சுறா
சுறாக்களால் எந்த நிறங்களையும் பார்க்க முடியாது. ஆனால் அவற்றின் பார்வை நீருக்கடியில் நம்முடையதை விட தெளிவானது.

12. பட்டாம்பூச்சிகள்
பட்டாம்பூச்சிகள் வண்ணமயமான பூச்சிகள். அவர்களின் பார்வை மிகவும் கூர்மையானது அல்ல. ஆனால் புற ஊதா ஒளி உட்பட மனிதர்களை விட பல வண்ணங்களையும் நிழல்களையும் இவற்றால் காண முடியும்.
