இந்தியாவை அதிரவைத்த உன்னாவ் பலாத்கார வழக்கு – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!!

0
89
supreme-court_reuters
Credit: The Wire

கடந்த 2017 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உன்னாவ் என்னும் சிறுமியை பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ செங்கார் பாலியல் பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக பாஜக மேலிடம் அவரை இடைநீக்கம் செய்தது. செங்காரை உத்திரபிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிகார வர்க்கத்திற்கு எதிராக நீதிவேண்டி உன்னாவின் குடும்பம் நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தான் உன்னாவின் மீது கொலை முயற்சி நடைபெற்றிருக்கிறது.

Unnao rape survivor injured in accident
Credit: PTI

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள சிறைச்சாலையில் உள்ள தனது உறவினர் ஒருவரை சந்திக்க உன்னாவின் குடும்பம் காரில் பயணித்தது. அப்போது லாரி ஒன்று உன்னாவின் கார் மீது மோத, வழக்கறிஞர் மற்றும் உன்னாவ் படுகாயமடைந்தனர். அவர்களோடு பயணித்த இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து நடந்த வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றியது உத்தரபிரதேச அரசு. இதைத்தொடர்ந்து எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, கொலைமுயற்சி, பலாத்காரம் ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிஐ. 

supreme court of india

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வழக்கை விசாரிக்காமல் வெளிமாநிலத்தில் விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாதிக்கப்பட்ட சிறுமி கார் விபத்து குறித்த அனைத்து தகவல்களும் தனக்கு வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரலிடம் உத்தரவிட்டார்.

unnao kuldeep singaaar
Credit:Scroll

நண்பகலில் மீண்டும் கூடிய நீதிமன்றம், உன்னாவிற்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோரின் வீடுகளுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உத்திரப்பிரதேச மாநிலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் டெல்லியில் பலாத்கார மற்றும் விபத்து வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளையும் விசாரிக்க உத்தரவிட்டார். தேவையிருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துதர அரசு தயாராக இருக்கவேண்டும் என்றார். 7 நாட்களுக்குள் சிபிஐ விசாரணையை முடிக்கவேண்டும் மற்றும் டெல்லியில் தினந்தோறும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடத்தப்பட்டு, 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோகாய் குறிப்பிட்டார். ரஞ்சன் கோகாயின் இந்த தீர்ப்பிற்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.