நமது நியோதமிழ் இணையதளம் துவங்கி இன்றோடு iஇரண்டாண்டுகள் ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் கால்பதிக்கிறது. தமிழில் ஏராளமான அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் இருக்கும் போதிலும் நியோதமிழிற்கு நீங்கள் வாகர்களாகிய நீங்கள் அளித்துவரும் ஆதரவு மகத்தானது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், பார் போற்றிடும் ஆளுமைகளின் வரலாறு, திடுக்கிட வைக்கும் வரலாற்று நிகழ்வுகள் என தனக்கே உரித்தான துல்லியத்துடன் நியோதமிழ் உங்களுக்கு ஏராளமான செய்திகளை வழங்கியிருக்கிறது.
உங்களுடைய ஒவ்வொரு காலையும் புத்துணர்வு மிக்கதாய் அமைந்திட தினமும் தன்னம்பிக்கை குறிப்புகளை அளிக்கிறது நம் நியோதமிழ். மேலும், தினமொரு குறள் மற்றும் அதற்கான விளக்கத்தையும் வழங்கி வருகிறோம். விண்வெளியில் நிகழும் ஆராய்ச்சிகளையும், எட்டப்படும் புதிய மைல்கல்களையும் வெளியிடும் முதல் ஊடகமாக நியோதமிழ் வெளியிடுகிறது. எங்களது அடுத்த முயற்சியாக, கருத்துக்களை இன்னும் எளிமையாக மக்களிடம் எடுத்துச்செல்ல வீடியோக்களையும் நமது இணையதளத்தில் பதிவேற்றத் தொடங்கினோம். முதல் வீடியோவிற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு தான் மீண்டும் மீண்டும் உத்வேகத்துடன் எங்களை உழைக்க வைத்திருக்கிறது.
உங்களுடைய கருத்துக்கள், நீங்கள் எதிர்பார்க்கும் கட்டுரைகள், திருத்தங்கள் போன்றவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மூன்று வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசித்து, எங்களை ஊக்கப்படுத்திய வாசகர்களாகிய உங்களுக்கு நியோதமிழ் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களுடைய ஆதரவு இனிவரும் காலங்களிலும் தொடரட்டும்.