வருடத்திற்கு அமெரிக்கர்கள் வீணாக்கும் உணவின் அளவு எத்தனை டன் தெரியுமா?

0
101
food-waste-problem-buckner
Credit:cbc.ca

உணவை வீணாக்குதல் என்பது எந்த வகையிலும் மன்னிக்கவே முடியாத குற்றமாகும். ஏனெனில் அவை மனித குலத்திற்கு மற்றும் எளிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் நேரடி தாக்குதல்கள். ஆப்பிரிக்க நாடுகளில் எத்தனையோ லட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்குத் தவிக்கிறார்கள். அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து அங்கிருக்கும் வறுமையை அகற்ற பாடுபட்டு வருகிறார்கள். இது இப்படி இருக்க வளர்ந்த நாடுகளில் உணவு வீணாக்கல் மிக மோசமான அளவை எட்டியுள்ளது.

food wastages

அமெரிக்க ஐக்கிய நாடுகள் தயாரிக்கும் மொத்த உணவுப்பொருட்களில் பாதி அளவை அம்மக்கள் வீணாக்குவதாக புதிய அறிக்கை ஒன்று அதிர வைத்திருக்கிறது. அமெரிக்காவில் வருடத்திற்கு 60 மில்லியன் டன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு ஆகும் செலவு சுமார் 160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால் இதில் பாதி அளவை சிறிய சிறிய காரணங்களுக்காக அம்மக்கள் வீணடித்து விடுகின்றனர்.

தூய்மையான உணவுப்பொருட்கள் கூட இப்படி யாருக்கும் பயனில்லாமல் வெளியே வீசப்படுகின்றன. இப்படி வீணாக்கப்படும் உணவுப்பொருட்களில் 40 சதவிகிதம் உண்ணக்கூடியவை என்கிறது ஒரு ஆய்வு. மேலும் 20 சதவிகிதம் பொதுமக்களிடம் சென்று சேர்வதற்குள் வீணாகிவிடுகின்றன. இதனைத்தடுக்கும் விதத்தில் ReFED அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பெரும் உணவு நிறுவனங்கள் உணவு வீணாக்கலைத் தடுக்க கூடுதலாக 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடும் பட்சத்தில் சுமார் 1.8 பில்லியன் உணவுகளை கூடுதலாக தயாரிக்கலாம் என கணக்கிட்டிருக்கிறது இந்த நிறுவனம்.

food-waste-problem-buckner
Credit:cbc.ca

ugly food movement என்னும் திட்டம் மூலம் யூகே-வின் மிகப்பெரிய வணிக வளாகமான டெஸ்கோ (Tesco) வின் உணவு வீணாக்கலை அரசு தடுத்துள்ளது. இந்த நிறுவனம் ஆண்டிற்கு 30,000 டன் உணவை வீணாக்குவது கடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படி மிச்சமாகும் உண்ணக்கூடிய பொருட்களை ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் விலங்குகளுக்கு அளிக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதுபோன்று பெரும் நிறுவனங்கள் உணவை வீணாக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலே வறுமை என்னும் சொல்லே மிஞ்சாது.