பாகிஸ்தானின் 1992 மற்றும் 2019 உலககோப்பை போட்டிகளுக்கு இடையே உள்ள சுவாரஸ்யமான ஒற்றுமைகள்

0
156
Pakistan-Cricket-Team-social-AP
Credit:Firstpost

உலகக்கோப்பை என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தொடரின் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறச்செய்யும். அரையிறுதி போட்டிக்கான இடத்தை ஆஸ்திரேலியா நியூசிலாந்தை வீழ்த்தி தக்கவைத்துக்கொண்டது. தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் அரையிறுதியில் நுழைய கடுமையாக போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் மீது கிரிக்கெட் தீவிர ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. காரணம் அந்த அணி 1992 உலகக்கோப்பையில் என்னவெல்லாம் செய்ததோ அதையெல்லாம் இப்போதும் செய்கிறது. இப்படியும் சொல்லலாம். 1992 ஆம் ஆண்டு அந்த அணிக்கு என்னவெல்லாம் நடந்ததோ அதுவெல்லாம் இப்போதும் நடக்கிறது. அப்படியென்ன நடந்துவிட்டது? பார்க்கலாம்.

pak
Credit:Stuff.co.nz

1992 உலககோப்பையில் மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மொத வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்படிருந்தது. இந்த ஆண்டு மொத்தம் 10 அணிகள் உலககோப்பை போட்டியில் பங்கேற்றிருக்கின்றன. இப்போதும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மொத வேண்டும் என்ற விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1992 உலககோப்பையில் ஒவ்வொரு போட்டியின்போதும் இரண்டு புதுப்பந்துகள் வழங்கப்படும். ஒரு தரப்பிற்கு ஒன்று என்ற வீதத்தில். இப்போதும் அப்படித்தான்.

1992 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய போட்டிகளில் பெற்ற முடிவுகள்: தோல்வி, வெற்றி, ஆல்அவுட், தோல்வி, தோல்வி, வெற்றி.

2019 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய போட்டிகளில் பெற்ற முடிவுகள்: தோல்வி, வெற்றி, ஆல்அவுட், தோல்வி, தோல்வி, வெற்றி.

1992 ஆம் ஆண்டு உலககோப்பையில் தோல்வியே பெறாத மார்டின் குரோவின் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் வென்று தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

2019 உலககோப்பையிலும் நியூசிலாந்து அணி இதுவரை எந்த போட்டியிலும் தோல்வியடையவில்லை. அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைக்க வேண்டுமென்றால் இப்போதும் நியூசிலாந்தை வெற்றிகொள்ளவேண்டும். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி 1992 உலககோப்பை தொடரின் 34 வது போட்டியாகும். இப்போது 33 வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் சந்திக்க இருக்கின்றன.

1992 உலககோப்பையில் பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக இருந்தவர் இன்சமாம் உல் ஹக்.

2019 ஆம் ஆண்டு உலககோப்பையில் பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக இருப்பவர் இன்சமாமின் உறவினர் இமாம் உல் ஹக்.

1992 உலககோப்பையில் பாகிஸ்தான் விளையாடிய ஆறாவது போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் வீரர் சொஹைல்.

2019 உலககோப்பையில் பாகிஸ்தான் விளையாடிய ஆறாவது போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் வீரர் சொஹைல். இருவருமே இடதுகை ஆட்டக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1992 உலககோப்பைக்கு முன்னர் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடைசியாக நடந்த உலககோப்பை சேம்பியன்களாக இருந்தனர்.

2019 இந்த உலககோப்பைக்கு முன்னர் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடைசியாக நடந்த உலககோப்பை சேம்பியன்களாக இருந்தனர்.

1992 உலககோப்பை போட்டியின்போது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆஸிப் அலி சர்தாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

2019 உலககோப்பை போட்டியின்போதும் ஆஸிப் அலி சர்தாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

1992 உலககோப்பை போட்டியின்போது ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் தோற்றாலும் வெளியேற வேண்டிய நிலையில் இருந்தது. இப்போது பாகிஸ்தான் அதே நிலையில் இருக்கிறது.