ரிஷப் பண்ட்டிற்கு வழிவிடும் தோனி – கிரிக்கெட் வாரியத்தின் அழுத்தம் தான் காரணமா?

Date:

இந்திய கிரிக்கெட்டில் சில பெயர்களுக்கென்று எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதில் தோனி என்பது அத்தனை எளிதில் நம் நினைவை விட்டகலாத பெயர் என்றால் மிகையல்ல. எத்தனையோ வெற்றிகள், கோப்பைகள், நினைவுகள் எல்லாம் கடந்து தோனி தன கிரிக்கெட் அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் நிற்கிறார். இந்திய கிரிகெட் வாரியம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சமூல வலைத்தள வாசிகள் என பலர் தோனியின் ஓய்வு கட்டாயமாக்கத் துடிக்கின்றனர்.

Jagran Josh
Credit:The Indian Express

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று முழுநேர ராணுவ அதிகாரியாக பணியாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் தோனிக்கு இராணுவத்தின்மீது அலாதியான பிரியமும் ஆர்வமும் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்திய ராணுவத்தின் பாராட்ரூப்பர்ஸ் பிரிவில் லெப்டினென்ட் கர்னலாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் சரிவர ஆடாத தோனியின் மீது வழக்கம்போல் கண்டனங்கள் வைக்கப்பட்டன. இந்தியாவின் உலகக்கோப்பை தோல்வி கிரிக்கெட் வாரியத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பயிற்சியாளர், லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் கேப்டன் என பல முக்கிய முடிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது தோனியை ஓரங்கட்டுவது.

dhoni army
Credit:MetroSaga

சொல்லப்போனால் தோனி தனது ஓய்வை அறிவிக்க பிசிசிஐ மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்திருக்கிறது. ஆனால் தோனியின் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், அவரை விளையாட விடாமல் ஒதுக்க பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. 15 பேர் கொண்ட அணியில் தோனியை இடம்பெறச்செய்து ஆனால் அவருக்குப்பதிலாக பிளேயிங் லெவனில் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்” ரிஷப் பண்டிற்கு போதிய அனுபவம் கிடைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தோனி போன்ற அனுபவ வீரர்களும் அணிக்குத்தேவை. தோனிக்கு எப்போது ஓய்வை அறிவிக்க வேண்டும் எனத் தெரியும். இதில் வற்புறுத்த ஒன்றுமேயில்லை” என்றார்.

மேற்கிந்திய தீவு தொடர்

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது திட்டத்தை வரும் மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து ஆரம்பிக்க இருக்கிறது. இந்த தொடரில் பும்ரா மற்றும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிகிறது. இத்தொடரில் ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார் என மேல்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்துவார். மேற்கு இந்திய தீவுகள் உடனான தொடருக்கான இந்திய வீரர்களை இன்று கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருகாலத்தில் ஆதர்சங்களாக நூறு கோடி மக்களின் நாயகனாக கொண்டாடப்பட்ட வீரர்களை இப்படி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி வெளியேற்றுவது இந்திய கிரிகெட் வாரியத்திற்கு கைவந்த கலை. அந்த வரிசையில் தோனியுடனான பனிப்போரை மெல்லத் துவங்கியிருக்கிறது பிசிசிஐ.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!