நடந்து முடிந்த அஞ்சலக தேர்வுகளை ரத்து செய்தது மத்திய அரசு – தமிழக அமைச்சர்கர்களின் வெற்றி!!

0
50
ravishankarprasad
Credit:India Today

தமிழகத்தில் அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் அஞ்சலர் உட்பட நான்கு வகையான பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் இதற்கான அறிவிப்பு வெளிவரும்போது எந்த கட்டுப்படும் விதிக்கப்படவில்லை. இந்த தேர்விற்கு தமிழகத்தில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அதாவது 11 ஆம் தேதி வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இதனால் பல்வேறு அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

percentage-reservation_
MyNation

முடங்கியது நாடாளுமன்றம்

மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்பினர். அதிமுக அமைச்சர்கள் நவநீத கிருஷ்ணன் தலைமையில் போராட்டத்தில் இறங்கினர். அதேபோல திமுக அமைச்சர்கள் அவையின் மையத்திற்குச் சென்று கூச்சலில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் தமிழக அமைச்சர்களின் இப்போராட்டம் தொடர்ந்ததால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

ravishankarprasad
Credit:India Today

வழக்கு

முன்னதாக சமூக ஆர்வலர் ஹென்றி தீபன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் “தமிழகத்தில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்த தபால் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். கேள்வித்தாளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மொழிமாற்றம் தமிழக தேர்வர்களை கடுமையாக பாதிக்கும். இதனால் இந்த தேர்வை ரத்து செய்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது விசானைக்கு வந்தது. கடந்த சனிக்கிழமை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில்” அஞ்சலக தேர்வை ரத்து செய்ய முடியாது. ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் கடைசி நேரத்தில் வினாத்தாள் மொழியை மாற்றியது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

madurai high court

இந்நிலையில் மத்திய அரசே தேர்வை ரத்து செய்திருக்கிறது. பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்தின் அறிவிப்பால் தமிழக மக்கள் மகிழ்ச்சியுற்றிருக்கின்றனர்.