ஜப்பானில் Seki நகரத்திற்கு அருகே Gifu என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் சிறியது. இது அந்த பகுதியில் உள்ள ஷின்டோ சன்னதிக்கு கீழே ஒரு மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. உண்மையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அழகிய குளத்திற்கு பெயரிடப்படவில்லை. அதன் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அவை ‘மோனட் வரைந்த வாட்டர் லில்லி ஓவியங்களை’ போல் இருந்தன என குளத்துடன் அதன் ஒற்றுமையைப் பற்றி மக்கள் குறிப்பிட்டனர். பின்னர் அது மோனட்ஸ் பாண்ட் (Monet’s Pond) என்று அழைக்கப்படுகிறது. இக்குளத்தின் அழகை ரசிப்பதற்காக பெருமளவு மக்கள் இப்பகுதிக்கு வருகிறார்கள்.
இந்த குளத்தில் நீர் தெளிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், அங்கிருக்கும் நீரூற்று நீரில் சத்துக்கள் இல்லை என்பது தான். நீரின் வெளிப்படைத்தன்மை அதன் அழகை அதிகரிக்கிறது. ஏனெனில் இது சூரிய ஒளியின் சிறிய மாற்றங்கள் கூட இந்த குளத்தின் நிறத்தை மாற்றுவதாக தோன்றுகிறது.

‘வாட்டர் லில்லி’ தொடர் கிளாட் மோனட் வரைந்த 250 ஓவியங்களை கொண்டது.கீழே உள்ளது மோனட் வரைந்த ஒரு ஓவியம்.





மோனெட் குளம் ஜப்பானிய மேப்பிள் மரங்களால் சூழப்பட்டுள்ளது. இது இலையுதிர் கால மாதங்களில் நிறத்தை மாற்றுகிறது. இதுவும் இந்த குளம் ஓவியம் போல் தோற்றமளிக்க மற்றொரு காரணமாக இருக்கிறது.





