கடந்த சில நாட்களாக வைரலாகும் வீடியோவில் இருக்கும் முதியவர் பெயர் கந்த பிரசாந்து. இவரும், இவரது மனைவியும் இணைந்து டெல்லி மால்வியா நகர் பகுதியில் உணவுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இது கிட்டத்தட்ட 30 வருடங்களாக கந்த பிரசாந்து நடத்தி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரம் படுத்து விட்டது.
நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் போட்டு பொருட்கள் வாங்கி சமைத்து விற்க ஏற்பாடும் செய்யும் காந்த பிரசாந்துக்கு மிச்சம் கிடைப்பது வெறும் 70 ரூபாய் மட்டுமே. 80 வயதான கந்த பிரசாந்தின் நிலையை அறிந்த கவுரவ் வசன் என்ற யூடியுபர் தனது சேனலில் இதுபற்றி வீடியோக்கள் பதிவிட்டதுடன், தனது சொந்த சமூகவலைதள பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த பலரும், அதை மறுபதிவு செய்துள்ளனர். ஒருவழியாக பல பிரபலங்கள் இதை பார்த்து தாங்களாக முன்வந்து உதவியுள்ளனர். அத்துடன், சமூகவலைதள பயன்படுத்தும் பலர் இணைந்து கந்த பிரசாந்துக்கு உதவியுள்ளனர்.
சோமேட்டோவும் தானாக முன்வந்து இந்த வயதான தம்பதி தயாரிக்கும் உணவுகளை ஆன்லைனில் விற்க உதவுவதாக தெரிவித்துள்ளது.
தற்போது இந்த தம்பதியின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்த நிலையில், அவர்களின் சிரிப்பை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இவரது கடைக்கு உணவு உண்ணவரும் பலரும் சாப்பிட்டு விட்டு செல்பி எடுக்க மறப்பதில்லை
மனிதன் ஒன்று பட்டால் நிச்சயம் மனிதத்தை வாழ வைக்க முடியும் என்று இந்த பதிவுகள் உணர்த்துகின்றன.