போக்கிமேனும் இல்ல; டோரா புஜ்ஜி பேக்கும் இல்ல.. மொய்க்கு தந்த மஞ்சப்பையே என் மூனாப்பு புத்தகப்பை.! பத்து நாளா அடம் பிடிச்சு கெடைச்ச படையப்பா பென்சில், அச்சுப் பதிக்க எண்ணெய்த் தலையில் தேச்ச அழி ரப்பர், நாலு ரூபாய் ஆனாலும் ராஜநடை போட வைக்கும் நடராஜா பேனா, கட்டிப் போட்டா குட்டி போடும் இலையும் கண்ணு பட்டா குறுகிடும் மயிலிறகும் அடையிருக்கும் புத்தகம், அதன் மேலிருக்கும் சிலேட்டு, பல்பம் கொறிச்சு வச்ச கடலை ஓடும் கொடுக்காப்புளி தோலும் குப்பையா ஒரு ஓரம்… போரடிச்சா விளையாட பொறக்கி வச்ச சூடுகொட்டை, அத்தனைக்கும் அடியில் வச்ச அக்காவோட பரீட்சட்டை… இதையெல்லாம் வச்சுதான் எடுத்து போனேன் பைக்கட்ட… அன்னைக்கு இருந்ததெல்லாம் இன்னைக்கு மாறிடுச்சு போகுது குழந்தை பொதிமூட்டை தூக்கிக்கிட்டு; என்றாலும் புதையல் தரும் பூமியப்போல் பொருளா வச்சதையெல்லாம் பொக்கிஷம் ஆக்கியிருக்கு என்னோட பைக்கட்டு.! -பாரதி தமிழ் (பா.பாரதிராஜா)
Date:
அருமையான சிந்தனை துளிகள் ஆருயிர் தோழா
அருமை…