இதுக்குத்தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று சொன்னேன் – தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு டுபிளேசிஸ் கூறும் காரணம்!!

Date:

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 30 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை மட்டுமே இந்த தொடரில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்தப்போட்டி யார் யாரை பின்னுக்குத்தள்ளுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. போட்டியில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து இமாம் உல் ஹக்கும், ஃபக்கர் சமானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

pak
Credit:Stuff.co.nz

ஆரம்பம் முதலே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். அடுத்து வந்த பாபர் ஆசம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். மறுமுனையில் முகமது ஹபீஸ் 20 ரன்களில் ஏமாற்றினாலும், அவருக்குப்பின் வந்த ஹாரிஸ் சொஹைல் அதிரடி காட்டினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பாபர் 69 ரன்கள் குவித்தது ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய சொஹைல் 89 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 308 ரன்களைக் குவித்தது.

ஏமாற்றம்

309 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்களான டீகாக் மற்றும் ஆம்லா ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். முதல் ஓவரிலேயே டீகாக்கின் கேட்ச்சை வஹாப் ரியாஸ் தவற விட, அடுத்த ஓவரில் ஆமீர் ஆம்லாவை வீட்டிற்கு அனுப்பினார். அடுத்து கைகோர்த்த டீகாக் – டுபிளேசி இணை சற்றுநேரம் நிலத்து ஆடியது. ஆனாலும் பாக். ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். இதனால் ரன்ரேட் மிகவும் குறைந்தது. இதனை சரிகட்டும் விதமாக அதிரடி காட்டிய டீகாக் சற்றுநேரத்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். டுபிளேசியும் 63 ரன்களோடு நடையைக் கட்டினார். அடுத்து வந்தவர்களில் பெஹளுவாக்கியோ மட்டும் கொஞ்சம் அதிரடி காட்டி 46 ரன்கள் எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. 

Pakistan-Cricket-Team-social-AP
Credit:Firstpost

தோல்விக்கு ஐ.பி.எல் தான் காரணம் – டுபிளேசி

தென்னாப்பிரிக்காவின் இந்த தொடர் தோல்விக்கு மிக முக்கிய காரணம் அந்த அணியினரின் பந்துவீச்சு ஆகும். நேற்று ககிசோ ரபாடா வீசிய ஸ்பெல் அனைத்தும் மகா மோசம். ரன்களை வேறு வாரி வழங்கிவிட்டார். இங்கிடியும் இப்படியே. ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்துவிட்டார். இதுகுறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் டுபிளேசி ,” ராபாடாவை இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்க கூடாது என்ற முடிவில் இருந்தோம். ஏனெனில் அடுத்து உலககோப்பை தொடர் இருக்கும்போது டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவது பவுலிங் பார்மை கேள்விக்குறியாக்கும் என எண்ணினோம். அதே போல ஐபிஎல் தொடரில் லீடிங் விக்கெட் டேக்கராக இருந்த ரபாடா தனது ஆக்ஷன்களை தவறவிட்டுவிட்டார். இந்த வருட தொடக்கத்தில் இருந்து 307 ஓவர்களை வீசியிருக்கும் ராபாடா அதில் 47 ஓவரை ஐபிஎல் போட்டிகளில் வீசியுள்ளார். குறிப்பாக அந்த தொடர் இறுதியில் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது தான் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிவிகிதத்தை குறைத்துவிட்டது. இது குறித்து ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னரே கலந்தாலோசித்தோம் ஆனால் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. இதனால் அணியினருக்கு தேவைப்படும் ஓய்வும் சரிவர கிடைக்காமல் போனது மிகப்பெரிய பின்னடவை அணிக்கு அளித்துவிட்டது என்றார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!