கண்கள் பற்றி மூடி மறைக்க முடியாத, ஆச்சரியமூட்டும் 9 உண்மைகள்!

Date:

கண்கள் தான் நம் உடலின் ஒளி. நாம் வாழும் உலகம் இவ்வளவு அழகானது என்பதை நாம் கண்கள் மூலமே அறிந்துக் கொள்ள முடியும். கற்பது, உண்பது, பயணிப்பது என்று வாழ்க்கையில் ஒவ்வொரு செயலிலும் கண்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இத்தகைய கண்கள் பற்றிய உண்மைகள் என்னவெல்லாம் என்று பார்க்கலாம்.

புதிதாக பிறந்த குழந்தைகள் காணும் நிறம்

“புதிதாக பிறந்த குழந்தைகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை மட்டும் காண்கின்றனர்” என்பது கட்டுக்கதை என்று, இங்கிலாந்து பல்கலைகழக குழந்தை ஆய்வகத்தின் தலைவர் அன்னா பிராங்ளின் என்பவர் “தி கார்டியன்” என்ற பத்திரிகையில் பேட்டியளித்திருந்தார்.

அவர் கூற்றப்படி, பிறந்த குழந்தைகள் சாம்பல் நிற நிழல்களை காணும் போது, அத்துடன் சிவப்பு நிறத்தையும் கண்டறிய முடியும். குழந்தைகள் அதிக வண்ணம் காண முடியாததற்கு காரணம் கண்களில் உள்ள கூம்புகள் வளர்ச்சியடைய காலம் தேவை. எனவே ஒளிச்சேர்க்கை செல்களை கண்களால் கண்டறிய இயலாது.

தொடர்ந்து இரண்டு மாதங்களில், அந்த செல்கள் வளர்ச்சியடைந்து விடும். அப்போது குழந்தைகளால் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை வேறுபடுத்தி அறிந்துக் கொள்ள முடியும். அதன் பின் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களின் வித்தியாசங்களை அறிந்து கொள்ள சில வாரங்கள் எடுக்கும்.

Also Read: நாம் கண் இமைப்பது ஏன்? கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா? A to Z

மனித கண்களால் எத்தனை நிறங்களை காணமுடியும்?

மனித கண்களால் 10 மில்லியன் அளவுள்ள வெவ்வேறு வண்ணங்களை வேறுபடுத்த முடியும். சராசரியாக 1 மில்லியன் நிறங்களை பிரித்து அறிய முடியும். மனித கண்ணில் பொதுவாக மூன்று வகையான கூம்புகள் காணப்படுகின்றன. அவை சிவப்பு, நீலம் மற்றும் பச்சை.

இந்த மூன்று வகையான கூம்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதால் தான் மில்லியன் கணக்கான நிறங்களை காண முடிகிறது. ஒரு நபருக்கு ஒரு வகையான கூம்பு அல்லது இந்த அனைத்து கூம்புகளும் இல்லை என்றால், அவர்களுக்கு ஒரு வகையான நிறக்குருடு இருக்கலாம்.

கண்கள் பற்றிய உண்மைகள்

கண் எனும் மாய உறுப்பு

மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்களைக் கண்டுபிடிப்பதில் இருந்து, கண்ணுக்குத் தெரியாத வண்ணங்களை உணர்ந்து கொள்வது வரை, உங்கள் கண்கள் நம்பமுடியாத பலவற்றை செய்யக்கூடியது. அதனால் தான் ‘என் கண்ணையே என்னால் நம்பவே முடியல’ என்கிறோம்.

‘கண்ணால் காண்பதும் பொய்’ என்பது எவ்வளவு உண்மை தெரியுமா? இதை நிரூபிக்க Optical Illusion தொடர்பான தொடர் ஒன்று இன்னும் சில வாரங்களில் நியோதமிழில் வெளியாகவுள்ளது. தவறாமல் படியுங்கள்.

வயதை பொறுத்து வளரும் கண்கள்

“கண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருக்கும்” இந்த கருத்து தவறானது. பிறந்த குழந்தைகளின் கண்கள் வளர்ந்தவர்களை விட சிறியதாகவே இருக்கும். முதல் இரண்டு ஆண்டுகளில் உங்கள் கண்கள் வேகமாக வளரும். அதன் பின் நீங்கள் பருவமடையும் போது நல்ல வளர்ச்சியை காண முடியும். நன்கு வளர்ச்சியடைந்த கண்கள் 7.5 கிராம் எடை கொண்டிருக்கும்.

பார்ப்பதை தீர்மானிக்கும் நீளம்

உங்கள் பார்வை மிக நீளமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்தால் உங்கள் பார்வையில் சிக்கல் ஏற்படலாம். அருகில் இருப்பதை நன்கு பார்க்க கூடியவர்களுக்கு நீளமான கண்கள் இருக்கும். தூரத்தில் இருப்பதை நன்கு பார்க்க கூடியவர்களுக்கு குறுகிய நீளம் கொண்ட கண்களாக இருக்கும்.

கண்கள் நீளம் தவிர கார்ணியாவின் வடிவம் (காண்டாக்ட் லென்ஸ்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணின் வெளிப்புற பகுதி), கருவிழி, கண்ணின் பின்புற பகுதி ஆகியவை கண்ணின் தரத்தை தீர்மானிக்கிறது. இவை அனைத்தும் ஒளியை பிரதிபலிக்க ஒன்றாகவே வேலை செய்கின்றன.

eye article 3

கண்ணில் சிக்கும் காண்டாக்ட் லென்ஸ்

காண்டாக்ட் லென்ஸ் சில வேலைகளில் கண் இமைகளுக்கு உள்ளே சென்று சிக்கி கொள்ளலாம் என்று அச்சம் ஏற்படும். ஆனால், உண்மையில் அது சாத்தியமில்லை. காரணம், கண்களில் கான்ஜுன்டிவா என்ற சதை போன்ற அமைப்பு உள்ளது. அது கண்களுக்கு உள்ளே பொருட்களை நுழைய விடாமல் தடுக்கிறது.

நீலநிற கண்களுக்கு என்ன காரணம்?

உலகில் பொதுவாக பழுப்பு நிற கண்கள் கொண்ட நபரையே காண முடியும். 2008 ஆம் ஆண்டின் ஆய்வின்படி 6000 ஆண்டுகளுக்கு முன் மரபணு மாற்றத்தின் விளைவாக நீல கண்ணுடைய நபர் பிறந்துள்ளார்.

Also Read: பிறக்கப் போகும் குழந்தையின் கண்களின் நிறத்தை இனி பெற்றோர்களே தேர்வு செய்யலாம்!

OCA2 என்ற மரபணுவின் பிறழ்வு பழுப்பு நிற கண்களை உருவாக்கும் திறனை முடக்கியது. அத்துடன் நீல நிறத்தில் மாற்றியது என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹான்ஸ் ஜபர்க் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

eye article 2

கண் சிமிட்டுதல்

ஒளி, ஒலி அதிகப்படியாக இருக்கும் போது உடலை உணரச் செய்யும் காரணமாக கண்கள் சிமிட்டப்படுகின்றது. மேலும், கண்கள் அதிகப்படியாக சிமிட்ட கண் நரம்பியல் பிரச்சனையும் காரணமாக உள்ளது.

அது மட்டுமின்றி தூசுபோன்ற சில இடையூறுகளால் அதிகமாக கண் சிமிட்டுகிறீர்கள். இவை இவ்வாறு இருக்க ஒரு குழந்தை சாதாரண பார்வைக்கு நிமிடத்திற்கு 1 அல்லது இரண்டு முறை மட்டும் கண்களை சிமிட்டும். அதுவே பெரியவர்கள் 14 லிருந்து 17 முறை சாதாரண பார்வையில் சிமிட்டுவர். இது வயது வாரியாக மாறுபடுவதில்லை.

Also Read: கண்ணின் விழித்திரையை அச்சிடும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

சன்கிளாஸ் ஏன் அவசியம்?

வெளியில் செல்கையில் சன்கிளாஸ் அணிவது சிறந்தது. புற ஊதா கதிர்கள் கண்ணில் அதிகம் படுவதால் கார்னியா மற்றும் வெண்படலத்தை சேதப்படுத்தும்.

இதனால் வலி, கண் சிவத்தல், வீக்கம், மங்கலான பார்வை, தலைவலி ஆகிய அறிகுறிகள் தென்படும். மேலும் புற ஊதா கதிர்கள் உங்கள் கண்களை தாக்கி நீண்ட கால பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

மனித உடலின் விளக்காக திகழும் கண்களில் இத்தனை ஆச்சரிய மூட்டும் விஷயங்கள் இருக்கிறது. கண்களை நீங்கள் கண்ணாடியில் உற்றுப் பார்க்கையில் அதன் அழகை ரசிப்பதுடன், அதில் இருக்கும் அறிவியலையும் சிந்தியுங்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!