மனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு தெரிந்துக் கொள்ளலாம் (Facts about human brain).
மூளையின் நரம்பு செல்கள்
உங்கள் மூளையில் நியூரான்கள் எனப்படும் சுமார் 100 பில்லியன் நுண்ணிய நரம்பு செல்கள் உள்ளன. இவை அனைத்தையும் எண்ணி முடிப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
மூளையில் மின்சாரம்
உங்கள் மூளை குறைந்த வாட் கொண்ட எல்.ஈ.டி விளக்கு எரியும் அளவிலான மின்சாரத்தை உருவாக்குகிறது.
மூளை நினைவுத்திறன்
போதை பொருள் பயன்படுத்தும் போது உங்கள் மூளை அனைத்தையும் மறக்கடிக்க செய்வதில்லை. ஆனால், தற்காலிக நினைவுத்திறனை மட்டும் இழக்க செய்கிறது.
மனித மூளையின் திறன்
உங்கள் மூளை கணினியை விட விரைவாக சிக்கல்களை தீர்க்கும் திறன் கொண்டுள்ளது. அதே போல் மனித மூளை தகவல்களை 260 MPH வேகத்தில் அனுப்புகிறது.

மூளையின் தன்மை
மூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை. எனவே மனித மூளையில் மனிதன் விழித்திருந்தாலும், எளிதில் அறுவைசிகிச்சை செய்ய முடியும்.
மூளைக்கு ஓய்வு
நீங்கள் உறங்கினாலும், உங்கள் மூளைக்கு ஓய்வு என்பதே இல்லை. மூளை உறங்கும் போதும், கனவு, தேவையற்ற சிந்தனையால் செயல்பாட்டிலேயே உள்ளது. இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனித மூளையின் அதிசயம்
ஏழு இலக்க எண்ணை மட்டுமே மூளையால் எளிதில் நினைவில் வைத்திருக்க முடியும். உளவியல் நிபுணர்கள் இதை ‘Magical Number Seven‘ என்கின்றனர்.
ஒரே நேரத்தில் பல வேலையை செய்யும் திறன் மூளைக்கு இல்லை. ஒருவர் பலவேலையை ஒரே நேரத்தில் செய்வதால் வேலையை கடினமாக்குவதுடன், நேரத்தை இரட்டிப்பாக்குகிறது.
மூளையில் தகவல்கள்
மூளையில் 2,500,00 ஜிகாபைட் அளவுள்ள தகவல்களை சேமிக்க முடியும். மேலும், 86 பில்லியன் முதல் 100 பில்லியன் வரையிலான நியூரான்கள் உள்ளனர்.

மூளை வளர்ச்சி
ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால் சத்தமாக படிப்பது குழந்தையின் மூளையின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. ஆனால், நாம் குழந்தைகளுக்கு அமைதியை கற்றுக் கொடுக்கிறோம். அமைதியை விட சந்தமாக பேசுவதும், கேள்வி கேட்பதும் குழந்தையின் நினைவாற்றலை வலுப்படுத்துகிறது.
மூளை நினைவுத்திறன்
மூளை பேசுவதை விட, படங்களை அதிகம் நினைவில் வைத்துக் கொள்கிறது. ஒன்றை பற்றி விவாதித்த பின் அதை பற்றி 72 மணிநேரத்திற்கு பின் பங்கேற்றவர்களிடம் கேட்டால் 10 சதவீதம் மட்டுமே அவர்கள் நினைவில் இருக்கும். ஆனால், படங்கள் மூலம் கூறப்படும் தகவல் 65 சதவீதம் நினைவில் வைத்துக் கொள்கின்றனர்.
தூக்கமின்மை
தூக்கமின்மை மூளையின் வெப்பநிலையை அதிகப்படுத்துகிறது. நீங்கள் சோர்வாக இருக்கையில், சத்தம் போட்டு அலறும் போது அது உங்கள் மூளையை குளிர்விக்கும்.
மனித மூளையின் எடை
மனித மூளை மனித உடலின் மொத்த எடையில் 2 சதவீதம் மட்டுமே உள்ளது. மேலும், நமது உடலில் இருந்து மொத்த ஆக்ஸிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக் கொள்கிறது.
ஆச்சரியமான கணினியாக இருக்கும் மூளையின் ஒரு பகுதி ‘Gray Matter‘ ஆகும். புத்திசாலித்தனத்தை குறிக்க இந்த சொல் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.