பென்குயின் பற்றிய உங்களுக்குத் தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

Date:

மாறுபட்ட வாத்து போன்று தோற்றமளிக்கும் பென்குயின்கள் எப்போதும் கண்ணிற்கு வியப்பை ஏற்படுத்தும் உயிரினமாக இருந்து வருகின்றது. இவை தங்கள் வாழ்விடம் மற்றும் கூட்டு வாழ்க்கை முறை மூலம் அனைவரையும் கவர்கிறது.

கடற்கரையில் பென்குயின்கள் அதிகம் வாழ்ந்தாலும், எல்லாக் கடற்கரையிலும் பென்குயினை நீங்கள் காண முடியாது. அவை குறிப்பிட்ட காலநிலைக்கு ஏற்பவே வாழ்கின்றன. பறக்க முடியாத பறவை இனமான இந்த பென்குயின்கள் வாத்துகளைப் போன்ற நடையும், தோற்றத்தில் சிறிதளவும் ஒன்றுபட்டிருக்கும்.

Also Read: மயில் பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமான 14 உண்மைகள்! மயில் சத்தம், இனப்பெருக்கம் உள்ளிட்ட தகவல்கள்!!

facts about penguins

பென்குயின் வகைகள்

7 வகை பென்குயின்கள் உள்ளன

  • பைகோஸ்ஸெலிஸ் அடெலியா
  • பைகோஸ்ஸெலிஸ் அண்டார்டிகா
  • அப்டெனோடைட்ஸ் ஃபார்ஸ்டெரி (பேரரசர் பென்குயின்)
  • பைகோஸ்ஸெலிஸ் பப்புவா (கிங் பென்குயின்)
  • அப்டெனோடைட்ஸ் படகோனிகா
  • யூடிப்டஸ் கிரிசோலோபஸ்
  • யூடிப்டெஸ் க்ரெஸ்டேடஸ்

இந்த பென்குயின்களில் பேரரசர் பென்குயின் (அப்டெனோடைட்ஸ் ஃபார்ஸ்டெரி) 30 கிலோ எடையும், கிங் பென்குயின் (அப்டெனோடைட்ஸ் படகோனிகா) 15 கிலோ எடையுடனும் காணப்படுகிறது. மற்றவை அதிகபடியாக 5 கிலோ எடை கொண்டிருக்கும். பேரரசர் மற்றும் கிங் பென்குயின்கள் சற்று உயரமாக வளரும் மற்றவை உயரம் குறைவாகவே இருக்கும்.

ஒவ்வொரு வகை பென்குயினையும் தலையில் முடி மற்றும் அலகின் நிறம் கொண்டு வேறுபடுத்தலாம்.

Did you know?
பேரரசர் பென்குயினால், சூடான மற்றும் குளிரான தண்ணீரை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியும்!

பென்குயின் வாழிடம்

கடல் பறவைகளாக கருதப்படும் பென்குயின்கள் 80 சதவீதம் கடற்கரையிலேயே வாழ்கின்றன. அவை தங்கள் வாழ் நாட்களில் பாதி நேரம் கடலிலும், மீதி நேரம் கரையிலும் இருக்கும். இதில் பெரும்பாலானவை தெற்கு அரைகோளத்திலேயே வாழ்கிறது. பென்குயின்கள் அண்டார்டிகாவில் வாழ்கின்றன என்பது கட்டுக்கதை மட்டுமே.

அதே போல் பென்குயின்கள் குளிர் காலத்தில் மட்டும் வாழ முடியும் என்பதும் ஒரு கட்டுக் கதை தான். ஏனென்றால் அவை பூமத்திய ரேகையின் வெப்ப மண்டல தீவுகளிலும் வாழ்கின்றன. கலபகோஸ் தீவுகள், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களை பென்குயின்கள் இயற்கையான வாழிடங்களாக கொண்டுள்ளது.

Also Read: யானை பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்!!

penguins 3

பென்குயின் உணவு

பென்குயின் மீன்களையே அதிகமாக உணவாக உட்கொள்ளும். அதில், ஓட்டு மீன்கள் மற்றும் சில ஆக்டோபஸ் வகை உயிரினங்களையும் உண்ணுகின்றன. சிறை பிடிக்கப்பட்ட பென்குயின்கள் நீண்ட நாட்கள் உண்ணாமல் கூட இருக்கும்.

மேலும், கடல் நீரை குடிக்கவும் இயலும். அத்துடன் கடல் நீரால் இவற்றின் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

Did you know?
பென்குயினுக்கு பற்கள் கிடையாது. அவை முதுகெலும்பு மற்றும் சதையின் உதவியுடனே உணவை உட்கொள்கின்றன!

நீச்சலடிக்கும்

பென்குயின்களால் பறக்க இயலாது. அவை, வேகமாக நீச்சலடிக்க மேலிருந்து கடலில் குதிக்கின்றன. இவற்றால் மணிக்கு 10 மைல் வேகத்தில் நீந்த முடியும். பைகோஸ்ஸெலிஸ் பப்புவா பென்குயின்கள் 20 மைல் வேகத்தில் நீச்சலடிக்கும். மற்ற பென்குயின்கள் 4 லிருந்து 7 மைல் வேகத்தில் நீச்சலடிக்கின்றன. பென்குயினால் 20 நிமிடம் தண்ணீரில் மூழ்கியிருக்கவும் முடியும்.

penguind 4

பேரழிவு காலம்

பென்குயினின் உடலில் வருடத்திற்கு ஒருமுறை மொத்த இறகுகளும் உதிர்ந்துவிடும். இந்த இறகுகள் மறுபடியும் முளைக்க 2 லிருந்து 3 வாரங்கள் வரை எடுக்கும். அதுவரை பென்குயினால், நீந்தவோ, மீன்களை பிடிக்கவோ இயலாது. இந்த காலத்தை “பேரழிவு காலம்” என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த கொடுரமான தோற்றத்தை கொண்டு அவை அந்நாட்களை கடக்க வேண்டியிருக்கும்.

பென்குயின் இனப்பெருக்கம்

கூட்டத்தில் தங்களுக்கென்று ஜோடியை ஆண், பெண் இரு பென்குயின்களும் தேடுகின்றன. இதில் பேரரசர் பென்குயினுக்கு வலுவான இல்லற பிணைப்பு உள்ளது. ஒருவேளை தன் துணையை விட்டுவிட்டு மற்றொரு துணையை கண்டுபிடித்தால், அவை முறையான மண முறிவு செய்துக் கொள்கின்றன.

இனச்சேர்க்கை சுமார் மூன்று வாரங்கள் நீடிக்கும். இனச்சேர்க்கையின் போது ஆண், பெண் இருவரும் ஒர் இடத்தில் அமர்ந்து அரவணைக்கின்றன. அத்துடன் அவை பாட்டு பாடுகின்றன.

ஆண் பென்குயின்கள், பெண் பென்குயினுக்கு பரிசுகள் தருகிறது. அதாவது அவை இனச்சேர்க்கைக்கு முன் கற்களை பரிசாக கொண்டு வரும். அவை முட்டைகளை அடைகாக்க பயன்படுத்தப்படும்.

Also Read: 50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்!

பென்குயின் குஞ்சு பொரித்தல்

முட்டை இட்ட பென்குயின்கள் கடலில் உணவு தேட செல்லும், அந்நாட்களில் ஆண் பென்குயின் முட்டைகளை அடைகாக்கும். அவை உணவருந்த கூட முட்டைகளை விட்டுச் செல்வதில்லை. 65 லிருந்து 75 நாட்கள் அடைகாக்கும்.

பெண் பென்குயின் மீண்டும் வர பல மாதங்கள் வரை ஆகலாம். அத்தனை நாட்களும் இந்த ஆண் பென்குயின் அடைகாக்கும். ஒருவேளை முட்டையில் குஞ்சு பொரித்துவிட்டாலும், அந்த குஞ்சுகளுக்கு ஆண் பென்குயின் உணவழித்து பாதுகாக்கும்.

Did you know?
ஆண் பேரரசர் பென்குயின்களின் உடலில் இருந்து மட்டும் பால் உற்பத்தி செய்ய முடியும்!. அவை குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன!!

பெண் பென்குயின் திரும்ப வரும் பொழுது, அவை குஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன. பின் ஆண் மற்றும் பெண் பென்குயின்கள் வேட்டைக்கு செல்லும், அப்போது குஞ்சுகள் கரையில் தான் இருக்கும்.

நீங்கள் இனி பென்குயினை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் இது எந்த இன பென்குயின் என்பதை பார்க்க மறந்திட வேண்டாம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!