
ஓனாமடோபோயியா (Onomatopoeia) என்று ஒன்றைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சட்டென்று சிரிப்பை வரவழைக்கும் வகையில் பெயர் இருந்தாலும், இது போன்ற வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது, கலந்துரையாடல்களில் பிறரை ஆச்சரியப்படுத்த உதவும். இப்போதெல்லாம் தகவல்கள் தான் வளம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். ஓனாமடோபோயியா என்பது வேறு ஒன்றுமில்லை. இயற்கையாகத் தோன்றும் ஒலிகளைக் குறிக்க நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் ஓனாமடோபோயியா என அழைக்கப்படுகின்றன.
“உஷ்.. சத்தம் போடாதே..!”
“லப்டப் என இதயம் துடிக்கிறது.”
இந்த சொற்றொடர்களில், ‘உஷ்’ மற்றும் ‘லப்டப்’ என்பன ஓனாமடோபோயியா என அறியப்படும்.
ஏதேனும் ஒரு சம்பவத்தைச் சொல்லும் போது வெறுமனே சொல்லாமல், ஒரு ஆர்வத்தைக் கூட்டுவதற்காக சத்தங்களோடு சொல்வோம். சத்தங்களோடு சொல்லும் போது, அதன் வெளிப்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஓனாமடோபோயிக் சொற்கள் கலவையில் வந்து, அவை ஒரு ஒலியின் வெவ்வேறு ஒலியைப்பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, தண்ணீரின் ஒலிகள், காற்றின் ஒலிகள் போன்ற வெவ்வேறு ஒலிகளைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளின் குழுக்களைச் சொல்லலாம்.

ஓனாமடோபோயியா மற்றும் பானோபோயியா
ஓனாமடோபோயியா, மிகவும் சிக்கலான பயன்பாட்டில், பானோபோயியாவின் (Phanopoeia) வடிவத்தை எடுக்கும். பானோபோயியா என்பது இயற்கையான ஒலியைக் காட்டிலும், விஷயங்களைப் பற்றி விவரிக்கும் ஓனாமடோபோயியாவின் ஒரு வடிவமாகும். டி. எச். லாரன்ஸ் (D. H. Lawrence), அவருடைய பாம்பு (The Snake) என்ற கவிதையில் , இந்தப் படிவத்தைப் பயன்படுத்துவதை விளக்குகிறார்.
அந்தக் கவிதையின் தாளமும் நீளமும் “எதிர்மறையான” ஒலிகளைப் பயன்படுத்தி, வாசகர்களின் மனதில் ஒரு பாம்பின் படத்தை உருவாக்குகின்றன.
ஓனாமோபோயியாவின் செயல்பாடு
பொதுவாக, என்ன நடக்கிறது என்பதை பிறருக்குச் சொல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. மறுபுறம், ஓனாமோபோயியா, வாசகர்களை அவர்கள் பிரதிபலிக்கும் வார்த்தைகளின் ஒலியைக் கேட்க வைக்க உதவுகிறது. வாசகர்கள் எந்த விதத்திலும் கவிஞருக்கு உதவ முடியாது. ஆனால்,ஓனாமடோபோயியா மூலம் கவிஞர் உருவாக்கிய உலகத்தில் வாசகர்கள் உலவ முடியும்.

ஓனாமடோபோயிக் சொற்களின் அழகு, அவை உண்மையில் வாசகர்களின் உணர்வுகளைப் பாதிக்கிறதா என்பதைப் பொறுத்து, அந்த விளைவு புரிந்துகொள்ளப்பட்டதா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து தான். மேலும், ஒரு எளிய சொற்றொடரின் வெளிப்பாடு வாசகர்களுக்கு அத்தொடர் குறித்தான யோசனையை வலிமையாக்கும் வகையில் இருக்க வேண்டும். ஓனாமடோபோயிக் வார்த்தைகளின் பயன்பாடு ஒரு சொற்றொடரில் முக்கியத்துவத்தை உருவாக்கப் பயன்படுகிறது.
இனிமேல் பேசும் போதும், எழுதும் போதும் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஓனாமடோபோயிக் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்குவோம்.