28.5 C
Chennai
Tuesday, February 27, 2024

[Rewind 2020]: கொரோனா பரவல் உள்ளிட்ட 2020-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!!

Date:

2020-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள். உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாகவும், அரசுப் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகுபவர்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பல தரப்பட்டோருக்கும் எளிய முறையில் ஒரே வரியில் தகவல்கள்…

ஜனவரி மாதம்

 • 10-ம் தேதி: பிரக்சிட் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.
 • 11-ம் தேதி: கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் முதல் நபர் உயிரிழப்பு – கொரோனாவால் உலகில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பும் இதுவே.
 • 19-ம் தேதி: ஹட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற விலக்கு.
 • 20-ம் தேதி: பாஜக தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
 • 21-ம் தேதி: இங்கிலாந்து இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி.
 • 29-ம் தேதி: உலக நாடுகள் தொடர்பிலிருந்து சீனா தனித்துவிடப்பட்டது – அனைத்து நாடுகளும் விமான சேவையை நிறுத்தின.
 • 30-ம் தேதி: இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ்.
 • 31-ம் தேதி: மெடிக்கல் எமர்ஜென்ஸியை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

பிப்ரவரி மாதம்

 • 4-ம் தேதி: தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து.
 • 5-ம் தேதி: தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
 • 7-ம் தேதி: கொரோனா வைரஸை உலகிற்கே கண்டறிந்து கூறிய சீன மருத்துவர் லீ வென்லியாங் மரணம்.
 • 10-ம் தேதி: 92-வது ஆஸ்கர் விழாவில், பாரசைட் திரைப்படம் 4 விருதுகளை குவித்தது.
 • 11-ம் தேதி: டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி -62 இடங்களை கைப்பற்றியது.
 • 14-ம் தேதி: தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்.
 • 15-ம் தேதி: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸ் தடியடி – தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைய வித்திட்ட நிகழ்வு.
 • 19-ம் தேதி: சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி இஸ்லாமிய இயக்கங்கள் சட்டசபை முற்றுகை போராட்டம்.
 • 23-ம் தேதி: டெல்லியில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து கலகம் – நாடே பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது.
 • 24-ம் தேதி: அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்தார்.

மார்ச் மாதம்

 • 1-ம் தேதி: பாராசிட்டமால் உள்ளிட்ட 26 மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை.
 • 7-ம் தேதி: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்.
 • 11-ம் தேதி: தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்.
 • 12-ம் தேதி: முதலமைச்சர் பதவி மீது தனக்கு ஆசையில்லை லீலா பேலஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார் ரஜினி.
 • 14-ம் தேதி: கொரோனா பரவலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு.
 • 16-ம் தேதி: கொரோனா எதிரொலி – தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்களை மூட தமிழக அரசு உத்தரவு.
 • 18-ம் தேதி: அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ராஜ்யசபா எம்.பிக்களாக தேர்வு.
 • 20-ம் தேதி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்கு.
 • 22-ம் தேதி: நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது – ஒட்டுமொத்த தேசம் வெறிச்சோடியது.
 • 24-ம் தேதி: நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டார் மோடி.
 • 27-ம் தேதி: இ.எம்.ஐ. சலுகை, வட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

ஏப்ரல் 2020

 • 4-ம் தேதி: அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி தந்தது தமிழக அரசு.
 • 6-ம் தேதி: எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு நிறுத்தம் என்ற அறிவிப்பு.
 • 7-ம் தேதி: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்காக இந்தியாவை மிரட்டும் தொணியில் பேசிய டிரம்ப்.
 • 10-ம் தேதி: இந்தியாவில் முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சை துவக்கம்.
 • 12-ம் தேதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதல்முறையாக ஆயிரத்தைக் கடந்தது.
 • 14-ம் தேதி: கொரோனா ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு.
 • 18-ம் தேதி: சீனாவிலிருந்து 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தமிழகம் வந்தன.
 • 20-ம் தேதி: பதிவுத்துறை அலுவலகங்கள் மட்டும் செயல்படத் தொடங்கியது -சர்ச்சையிலும் சிக்கியது.
 • 23-ம் தேதி: தொழிற்சாலைகள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு இயங்க தமிழக அரசு அனுமதி.
 • 29-ம் தேதி: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மே 2020

 • 1-ம் தேதி: இந்தியாவில் 3-ம் கட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு.
 • 5-ம் தேதி: முதல்முறையாக கோயம்பேடு மார்க்கெட் மூடல்.
 • 7-ம் தேதி: தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு – பல கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டி நின்ற குடிமகன்கள்.
 • 11-ம் தேதி: கோயம்பேடு மார்க்கெட் திருமழிசை பகுதிக்கு தற்காலிக மாற்றம்.
 • 18-ம் தேதி: தமிழக அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கத் தொடங்கியது.
 • 24-ம் தேதி: சென்னையை தவிர பிற மாவட்டங்களில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி.
 • 25-ம் தேதி: 2 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடக்கம்.
 • 30-ம் தேதி: உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா.
 • 31-ம் தேதி: அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறி காவலரால் கொல்லப்பட்டார்.

ஜூன் 2020

 • 1-ம் தேதி: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து தொடக்கம்.
 • 8-ம் தேதி: தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பு.
 • 9-ம் தேதி: தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – ஆல் பாஸ் அறிவிப்பு.
 • 10-ம் தேதி: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் மரணம் – நாட்டில் கொரோனோவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ.
 • 13-ம் தேதி: வரலாற்றில் முதல்முறையாக தலைமைச் செயலகம் மூடல்.
 • 21-ம் தேதி: சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் சந்தித்த சூரிய கிரகணம்.
 • 22-ம் தேதி: உடுமை சங்கர் கொலை வழக்கு – கவுசல்யாவின் தந்தை விடுதலை.
 • 23-ம் தேதி: சாத்தான்குளத்தில் பெனிக்ஸ்-ஜெயராஜ் காவல்துறை சித்ரவதையால் உயிரிழப்பு.
 • 27-ம் தேதி: ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர ஜனாதிபதி ஒப்புதல்.
 • 29-ம் தேதி: டிக்டாக், ஹலோ போன்ற சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

ஜூலை 2020

 • 1-ம் தேதி: சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழப்பு – இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. கைது.
 • 9-ம் தேதி: மத்திய பிரதேசத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா திறப்பு.
 • 14-ம் தேதி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை முடிவு.
 • 20-ம் தேதி: பிரதமர் அலுவலக துணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ். நியமனம்.
 • 22-ம் தேதி: NEOWISE வால்நட்சத்திரம் பூமிக்கு மிக நெருக்கமாக வந்தது.
 • 23-ம் தேதி: கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு.
 • 24-ம் தேதி: தமிழகத்தில் நில அளவீட்டுக் கட்டணம் கிடுகிடு உயர்வு.
 • 29-ம் தேதி: பிரான்ஸில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன.
 • 30-ம் தேதி: மார்ஸ் 2020 விண்கலத்தை புளோரிடாவில் உள்ள கேப்கனாவெரல் விமானப்படை தளத்திலிருந்து (Cape Canaveral Air Force Station, Florida) Atlas V என்ற ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு பயணித்தது.

ஆகஸ்ட் 2020

 • 3-ம் தேதி: லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வெடி விபத்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
 • 5-ம் தேதி: அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா – பிரதமர் பங்கேற்பு.
 • 6-ம் தேதி: இலங்கை தேர்தல் – ராஜபக்சே அமோக வெற்றி.
 • 7-ம் தேதி: மூணாறு அருகே மண் சரிவில் சிக்கி 85 தமிழக கூலித் தொழிலாளர்கள் உயிரிழப்பு.
 • 8-ம் தேதி: கோழிக்கோடு விமான விபத்து – பைலட் உட்பட 18 பேர் மரணம்.
 • 9-ம் தேதி: இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்பு.
 • 10-ம் தேதி: சென்னை – அந்தமான் இடையே 2,312 கி.மீ. தூரம் கடலுக்கு அடியில் ஆப்டிகல் பைபர் கேபிள் திட்டம் தொடக்கம்.
 • 11-ம் தேதி: பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
 • 21-ம் தேதி: இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்.
 • 26-ம் தேதி: அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிப்பு.
 • 28-ம் தேதி: காங்கிரஸ் மூத்த தலைவரும், தொழிலதிபருமான வசந்தகுமார் எம்.பி. காலமானார்.
 • 31-ம் தேதி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம்.

செப்டம்பர் 2020

 • 1- ம் தேதி : Asteroid 11 ES4 பூமியை நெருங்கியது.
 • 5-ம் தேதி: தமிழகத்தில் பிரதமரின் கிஸான் நிதி உதவித் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிப்பு.
 • 9-ம் தேதி: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் பொறுப்பேற்பு; பொருளாளராக டி.ஆர்.பாலு பதவியேற்பு.
 • 12-ம் தேதி: நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சோகம்.
 • 16-ம் தேதி: ஜப்பான் புதிய பிரதமராக ஹோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டார்.
 • 20-ம் தேதி: புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.
 • 23-ம் தேதி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்.
 • 25-ம் தேதி: இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பு கலைப்பு – தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் புதிதாக துவக்கம்.
 • 28-ம் தேதி: நாட்டிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுக்கும் திட்டம் ஆந்திராவில் தொடக்கம்.
 • 30-ம் தேதி: பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உட்பட 32 பேர் விடுவிப்பு. இதேநாளில் பிரமோச் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அக்டோபர் 2020

 • 1-ம் தேதி: ஹத்ரஸுக்கு சென்ற ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தடுத்துநிறுத்தி கீழே தள்ளினர்.
 • 1-ம் தேதி: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலுக்கு வந்தது.
 • 3-ம் தேதி: பல தடைகளையும் மீறி, ஹத்ரஸுக்கு சென்றனர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.
 • 3-ம் தேதி: உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி.
 • 6-ம் தேதி: பூமி – செவ்வாய் இடையேயான மிக நெருக்கமாக சந்திப்பு
 • 7-ம் தேதி: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி அறிவிப்பு.
 • 8-ம் தேதி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்.
 • 11-ம் தேதி: சொத்துரிமையை அங்கீகரிக்கும் விதமாக சொத்து அட்டை வழங்கும் திட்டம் அறிமுகம்.
 • 15-ம் தேதி: அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் காலமானார்.
 • 20-ம் தேதி: பென்னு விண்கல்லில் (Bennu) இருந்து மாதிரியை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது ஓரிஸிஸ்-ரெக்ஸ்.
 • 26-ம் தேதி: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
 • 31-ம் தேதி: சென்னை- குமரி இடையேயான தொழில்வழி சாலை அமைக்கும் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் உத்தரவு ரத்து.

நவம்பர் 2020

 • 7-ம் தேதி: அமெரிக்க அதிபராக ஜோ பிடனும் – துணை அதிபராக கமலா ஹாரிசும் தேர்வு.
 • 13-ம் தேதி: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க குழு அமைப்பு.
 • 16-ம் தேதி: பீகார் முதல்வராக 4 – வது முறையாக வெற்றி பெற்றார் நிதிஷ்குமார்.
 • 19-ம் தேதி: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் சிபிஐ விசாரணை நடத்த முடியாது- உச்சநீதிமன்றம்
 • 21-ம் தேதி: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக புதிய ஏரி – தேர்வாய் கண்டிகை ஏரியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா. இதேநாளில் அந்த விழா மேடையிலேயே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது.
 • 25-ம் தேதி: அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனா மரணம்.
 • 26-ம் தேதி: புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லிக்கு படை திரண்ட விவசாயிகள்
 • 26-ம் தேதி: நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

டிசம்பர் 2020

 • 3-ம் தேதி: சாங்கே-5 விண்கலம் நிலவில் உள்ள பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து நிலவில் தங்கள் நாட்டின் கொடியை சீனா நிலைநாட்டியது. நிலவில் கொடியை ஏற்றிய இரண்டாவது நாடு சீனா.
 • 4-ம் தேதி: 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர்கள் என பெயரிட மாநில அரசு பரிந்துரைக்கும் என முதல்வர் அறிவிப்பு.
 • 7-ம் தேதி: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்பு.
 • 8-ம் தேதி: சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பிக் கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
 • 8-ம் தேதி: தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.
 • 10-ம் தேதி: ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனைக்கு பிறகு வெடித்துச் சிதறியது.
 • 18-ம் தேதி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சியினர் உண்ணாவிரதம்.
 • 19-ம் தேதி: பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.2500 முதலமைச்சர் அறிவிப்பு. இதேநாளில் சேலத்தில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
 • 20-ம் தேதி: தமிழகம் முழுவதும் 16,500 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த திமுக முடிவு.
 • 23-ம் தேதி: திட்டமிட்டப்படி திமுக கிராம சபைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கின.
 • 27-ம் தேதி: சென்னையில் அதிமுக தேர்தல் பிரச்சாரம் முறைப்படி தொடங்கப்பட்டது.
 • 28-ம் தேதி: தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உதயம் -இது தமிழகத்தின் 38-வது மாவட்டமாகும்.
 • 29-ம் தேதி: தனது உடல் நலனைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தனது முடிவைக் கைவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!