விலைக்கு வாங்கப்பட்ட புகழ் பெற்ற TIME வார இதழ் நிறுவனம் !!

Date:

பத்திரிகை வரலாற்றில் ஜாம்பவானாகத் திகழும் டைம் (Time) வார இதழ் அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது. மெரிடித் நிறுவனத்திடமிருந்து (Meredith Corporation) சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப் (Marc Benioff) 1395 கோடிக்கு டைம் நிறுவனத்தை வாங்கியுள்ளார். 95 ஆண்டு காலமாகப் பத்திரிகைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியது டைம் இதழ். உலகம் முழுவதிலும் 50 நாடுகளில் இந்த இதழ் விற்பனையாகிறது. தொலைக்காட்சி, அலைபேசி எனப் பல ஊடகங்கள் வந்து விட்ட இன்றும் டைம் இதழுக்கு 2.6 கோடி பேர் வாசகர்களாக உள்ளனர் என்பதே அதன் புகழுக்குச் சான்று.

 time magazine
Credit: Time

இருவர் !!

இளம் பத்திரிக்கையாளர்களாக இருந்த பிரிட்டன் ஹேடன் (Briton Hadden), ஹென்றி லூஸ் (Henry Robinson Luce) ஆகியோரால் டைம் இதழ் தொடங்கப்பட்டது. 1923 – ஆம் ஆண்டு 86,000 டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த இதழ் உலகப் பத்திரிக்கை வரலாற்றில் பல உயரங்களை அடைந்திருக்கிறது. அரசியல், தொழில்நுட்பம், சினிமா என எல்லாத் துறைகளிலும் கால் பதித்தது டைம்.  தலைசிறந்த தொழிலதிபர்கள், சக்தி வாய்ந்த தலைவர்கள், பெண்கள் என ஒவ்வொரு வருடமும் உலகின் சிறந்த 100 விடயம் ஒன்றினை அறிமுகப்படுத்தும்.

mahatma gandhi
Credit: Time

அதே போல், டைம் இதழின் அட்டைப்படம் உலகப் பிரசித்தி பெற்றது. அதில் ஒருவரது புகைப்படம் வெளியிடப்படுமேயானால் அவர் உலகளாவிய அங்கீகாரம் கொண்டவராக மதிக்கப்படுவார். அமெரிக்காவுக்கான டைம் இதழின் பதிப்பு நியூயார்க் நகரத்தில் நடைபெறுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கான பாதிப்பு லண்டனிலும், ஆசியப் பதிப்பு ஹாங் காங்கிலும் நடைபெறுகின்றன.  டைம் இதழின் சிட்னி பதிப்பு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

பொற்காலம்

அச்சுப் பிரதிகளின் பொற்காலம் என்பது சென்ற நூறாண்டு தான். செய்திகளைத் தெரிந்து கொள்ள இதழ்கள் மட்டுமே இருந்த காலம். மேலை நாடுகளில் வாசிப்பு தீவிரமடைந்த காலமும் அதுவே. அதனை டைம் நாளிதழ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. ஃபார்ச்சூன், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட்,  மனி, பீப்பிள் அண்ட் ஸ்டைல் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இதழ்களைத் துவங்கியது டைம். புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த லைஃப் இதழ் வாசகர்களை சுண்டி இழுத்தது.

life
Credit: Life Magazine
அறிந்து தெளிக !!
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட லைஃப் (Life) உலக அளவில் ஒருகாலத்தில் வாரந்தோறும் 135 லட்சம் பிரதிகள் விற்றது. இன்றைய வரையில் இது முறியடிக்கப்பட இயலாத சாதனையாகக் கருதப்படுகிறது.

இருண்ட காலம்

பத்திரிகைத் துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த டைம் இதழுக்கும் சோதனைக் காலம் என்ற ஒன்று வந்தது. 90 – களின் துவக்கத்தில் பெருமளவில் வளர்ச்சி பெற்ற காட்சி ஊடகங்களினால் இதழின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்தது. பணியாளர்களுக்கு சம்பளம் அளிக்கக் கூட இயலாத நிலையில் இருந்து மீண்டும் புத்துயிர் பெற்றது 2000 – ஆம் ஆண்டிற்குப் பின்னால் தான். அட்டையில், கருத்தில், எழுத்தில் என வளர்ந்து வரும் நவீன உலகத்திற்கு ஏற்றவாறு தன்னைப்  புதுப்பித்துக் கொண்டது டைம். ஆனால், தன் தரத்தில் ஓரங்குலம் கூட கீழிறங்கியது கிடையாது.

 first time magazine
Credit: Time Magazine

கடந்த 2017 – ஆம் ஆண்டு மெரிடித் நிறுவனம் டைம் நாளிதழை வாங்கியது. பல நிர்வாகக் குளறுபடிகளில் இருந்த இதழ் தற்போது மார்க் பெனிஆப் – ற்குக் கைமாறியுள்ளது. டைம் இதழின் அச்சுத்துறையில் தனது தலையீடு இருக்காது என அறிவித்துள்ள மார்க், உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த பத்திரிகை இது எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். இன்றைக்குக் கணினி, தொலைபேசி, தொலைக்காட்சி என மக்களின் வாசிப்புப் பழக்கத்திற்குப் பல இடையூறுகள் இருந்தாலும் டைம் அத்தனையும் தாண்டி வெற்றிபெறும். இந்த உலகத்திற்குத் தான் யார் ? என்பதை மறுபடியும் ஒருமுறை நிரூபிக்கும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!