உத்தரகண்ட் பனிப்பாறை பெருவெள்ளம்: பேரழிவுக்கு என்ன காரணம்?

Date:

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகியதில் தவுல்கங்கா, அலக்நந்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஒரு நீர்மின் நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றொன்று சேதமடைந்தது. மேலும் நீர்மின் திட்ட கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலார்கள் 160 பேர் அடித்துச்செல்லப்பட்டனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி மாதமானது கடும் குளிரானதாகவே இருக்கும். இக்காலத்தில் பனிமலைகள் உருகாமல் இறுகி பாறையாகவே இருக்கும். ஆனால், தற்போது பிப்ரவரி மாதத்தில்தான் பனிப்பாறை உருகியுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பனிப்பாறையானது வெடித்து உருகியுள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறை ஏரிகள் எவ்வாறு உருவாகின்றன? அவை ஏன் சில நேரங்களில் வெடிக்கின்றன? இங்கே பார்க்கலாம்.

glacier

பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறை ஏரிகள் எப்படி உருவாகின்றன?

ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பனிப்பாறைகள் காணப்படுகின்றன. அவற்றில் சில நூறு, ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இந்தியாவின் வடக்கு எல்லையின் ஒரு பகுதியாக இருக்கும் இமயமலையில் பனிப்பாறைகள் பெரிய தொகுதிகளாக உள்ளன. இந்தியாவின் இமயமலைப்பகுதியில் ஏறத்தாழ 10,000 பனிப்பாறைகள் உள்ளன. உத்ரகாண்ட்டில் மட்டும் 1495-க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பனிப்பாறை வெடிப்பு, இமயமலையின் மேற்கு பகுதியில் ஏற்பட்டது.

பனிப்பாறைகள், பனியின் அடர்ந்த அடுக்குகளால் ஆனவை. பனிப்பாறைகளானது, படர்ந்திருக்கும் பாறையுடன் கூடிய மென்மையின் தன்மையைப் பொறுத்து நகர்ந்து விடுகின்றன அல்லது ஓடுகின்றன. ஒரு பனிப்பாறையின் “நாக்கு” ​​அதன் உயரமான தோற்றத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அளவிற்கு நீளக்கூடியது. பனி மேன்மேலும் குவிவதையும் அல்லது உருகுவதையும் அடிப்படையாகக் கொண்டே நீளும்.

“பனிப்பாறைகள், மலை பள்ளத்தாக்குகளில், சமவெளிகளில் பாய்ந்து செல்லும், சில இடங்களில் கரைந்து அல்லது உடைந்து கடலில் கலந்துவிடக்கூடும்” என தேசிய பனி மற்றும் பனி தரவு மையம் தெரிவிக்கிறது (National Snow and Ice Data Center).

புரோகிளாசியல் ஏரிகள் என்பவை, வண்டல் மற்றும் கற்பாறை அமைப்புகளில் படிந்திருக்கும் பனிப்பாறைகள் உருகியபின் உருவாகும். இதில் கூடுதலாக நீர் சேரும்போது அல்லது அழுத்தம் ஏற்படும்போது பள்ளத்தாக்குகளில் இயற்கையாக உண்டான கரைகளை மட்டுமல்ல மனிதனால் உருவாக்கப்பட்ட அணைகளை கூட உடைக்கச் செய்து, ஆறுகள் மற்றும் நீரோடைகளில் ஏராளமான வெள்ளநீரை ஏற்படுத்திவிடும்.

lake

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் படி, காலநிலை மாற்றத்தால் இந்து குஷ் மலையின் பல்வேறு பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதால், புதிய பனி ஏரிகள் உருவாகுகிறது. பனிப்பாறைகள் உருகும்போது, பனிப்பாறைகளுடன் பனி, கற்கள், மண் என அடித்துச்செல்லும் போது மொரைன் அணைகளை தகர்த்துவிடுகின்றது. நாம் வாழக்கூடிய பகுதிகளில் கட்டப்படும் அணைகள் போல இல்லாமல், மொரைன் அணைகள் பலவீனமாக இருப்பதால் பனிப்பாறை ஏரியின் உடைப்புகளுக்கு வழி வகுக்கிறது.

வெள்ளப்பெருக்கு காரணம்?

இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.

நில அதிர்வு மற்றும் அதிகப்படியான நீர் அழுத்தம் உருவாகுவதன் மூலம் பனிப்பாறைகள் வெடிக்கக்கூடும். ஆனால் காலநிலை மாற்றமும் ஒரு காரணம். குறைந்த அளவிலான பனிப்பொழிவு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதை துரிதப்படுத்துகிறது. இதனால் நீர் ஆபத்தான அளவிற்கு உயரக்கூடும்.

“உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மலை பனிப்பாறைகள் கடந்த காலத்தில் மிகப் பெரியவை. அவை காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக வியத்தகு முறையில் உருகி சுருங்கி வருகின்றன” என்று வூட்ஸ் ஹோல் ஓசியானோகிராஃபிக் இன்ஸ்டிடியூட்டின் இணை விஞ்ஞானி சாரா தாஸ் கூறினார்.

பனிப்பாறை பேரழிவுகளை முன்னறிவிப்பு செய்ய முடியுமா?

“இமயமலை முழுவதும் பல பனிப்பாறைகள் மற்றும் பனிப்பொழிவு நிறைந்த ஏரிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவை கண்காணிக்கப்படாதவை” என்று சாரா தாஸ் கூறினார். “இந்த ஏரிகளில் பல செங்குத்தான பள்ளத்தாக்குகளின் நீரோடை. அவை உடையும்போது தீவிர வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவு உண்டாக்கும் திறன் கொண்டவை.”

சில பனிப்பாறைகள் தொலைதூரங்களில் இருப்பதால் கண்காணிப்பதற்கு வாய்ப்பு குறைவு.

Also Read: முன்னெப்போதும் இல்லாத அளவு வேகமாக உருகும் ஆர்டிக் பனிப்பாறைகள்: 2021 எப்படி இருக்கப் போகிறது தெரியுமா?

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!