50 நாட்கள் தொடர்ந்த நிலநடுக்கம் ஆனால் ஒருவராலும் அதை உணர முடியவில்லை!!

Date:

இது நடந்தது துருக்கியில். இன்றோ நேற்றோ நடந்தது அல்ல இந்த நடுக்கம். ஐம்பது நாட்கள் தொடர்ந்து நிலம் நடுங்கியது. ஆனால் யாரும் இதனை உணரவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு உணரப்பட்ட இந்த கேள்விக்குத் தான் இன்றுவரை விடை தெரியாது முழிக்கின்றனர் ஆய்வாளர்களும் அவர்களுடைய விலையுயர்ந்த கணிப்பொறிகளும். இதனைப்பற்றித் தெரிந்துகொள்ள நாம் முதலில் அணுகவேண்டியது கண்டத்திட்டுகள் அல்லது டெக்டானிக் திட்டுகளைத்தான். அணுகுவோமா?

phantom quakes
Credit: themorningbulletin

டெக்டானிக் தட்டுகள்

தொடர்ந்தமைக்கு நன்றி. நமது பூமி பலவித அடுக்குகளைக் போர்த்திக்கொண்ட நெருப்பு பந்து என்பது அனைவரும் அறிந்ததே. அதன் உட்கரு திட நிலையில் இருந்தாலும் அதனைச் சுற்றி அதீத அடர்த்தி கொண்ட நெருப்புக் கூழ்மம் எப்பேதும் கொதித்தபடி இருக்கிறது‌. இதனைச் சுற்றியுள்ள அடுக்கு “Mantle” எனப்படும்.  இதற்கும், உயிர்கள் வசிக்கும் பூமி மேலோடுக்கும் இடைப்பட்ட  “Lithosphere” எனப்படும் அடுக்கே பல பாகங்களாக பிரிந்து நகரும் டெக்டானிக் தட்டுகளாக காலப்போக்கில் மாறின. உட்கருவைச் சூழ்ந்துள்ள கூழ்மத்தின்‌  சுழற்சியினால் தோன்றும் விசையே தட்டுகளை எப்போதும் நகரும்படி வைக்கிறது. முழு பூகோளத்தில் மொத்தம் பெரியதும் சிறியதுமாக 17 தட்டுகள்  இருக்கின்றன அவை “கடற்புற ஓடு (Oceanic crust), மற்றும் கண்ட மேலோடு (continental crust) என இரண்டாகப்  பிரிக்கப்பட்டுள்ளன. கடல் பரப்பு அதிகமுள்ளவை கடற்புற மோலோடாகக் கருதப்படும். இருப்பதிலேயே பெரிய மற்றும் சிறிய தட்டுகள் முறையே “பசிபிக் மற்றும் நியூ ஹெப்ரைட்ஸ் (Pacific and New Hebrides plate) ஆகும்.

நிலநடுக்கம் மற்றும் அதன் வகைகள்

நகரும் டெக்டானிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது ஏற்படும் அதிர்வுகளே நிலநடுக்கம் ஆகும். அவை மூன்று விதமாக நிகழலாம். ஒன்றை கீழ்தள்ளி ஒன்று மேலேறுவது (subduction zone), ஒன்றுடன் ஒன்று மோதி எழுவது (மலைத்தொடர் உருவாதல்), ஒன்றோடொன்று மோதி விலகிச் செல்லுதல் (உருவாகும் இடைவேளி புதிய கடல் நீரோட்டத்தை உண்டாக்கும்). ஒவ்வொரு தட்டும் மற்றொரு தட்டோடு தொட்டு நிற்கும் எல்லைக்கோடு “Fault” எனப்படும். கலிபோர்னியா உள்ள 1000 கிமீ நீளமுள்ள கோடுகள் இப்படி வந்ததுதான்.

usquake file
Credit: The Wichita Eagle

உலகெங்கிலும் எப்போதும் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்ட வண்ணமே உள்ளன. அதை பெரும்பாலும் நம்மால் உணர முடிவதில்லை.  ஏனெனில் தட்டுகள் வருடத்திற்கு 8 செமீ மட்டுமே நகர்கின்றன. நமது நகங்கள் வளுரம் வேகத்தில் அவை மோதி எழும்புவதால் நம்மால் அதன் தாக்கத்தை உணரமுடியாமல் போய்விடுகிறது. நாம் உணரும் “சீய்ஸ்மிக் (seismic) அலைகள் மொத்தம்  P (Primary wave), S (shear wave), L (long or Love wave) என மூன்று வகைப்படும். இங்கே P wave என்பதை சைக்கிள் டியூப் ல்  உண்டாகும் வீக்கம் போலவும் அவை நகருவது போலவும் கருதினால் s wave யினை ஒரு கயிற்றினை காற்றின் உதறினால் உண்டாகும் அலையாக கருதவேண்டும். இப்படித்தான் இரு அலைகளும் பாறைகளின் வழியாக பரவுகின்றன. இந்த இரண்டு அலைகளும் ஒன்று சேர்ந்தால் அவை கடலின் அலைகளைப் போல வேகமாக நகரும். அதுவே L wave ஆக இருக்கும். பொதுவாக இந்த L அலைகளே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். தரைக்கடியில் ஏற்படும் மோதல் மற்றும் மோதிக்கொள்ளும் தட்டுகளின் தன்மையே உருவாகும் இந்த அலைகளின் பெயர்களை  தீர்மானிக்கின்றன.

பூமி மேற்பரப்பிற்கு மூன்று வித ஆழத்தில் இருந்து அதிர்வலைகள் வந்து சேர்கின்றன. அதில் 300கிலோமீட்டர் ஆழத்திற்கும் அப்பால் ஏற்படும் நடுக்கங்கள் “ Deep focus quakes “ எனவும், 55 கி.மீ முதல் 300 கி.மீ வரை உருவாகும் நடுக்கங்கள் “intermediate focus quakes” எனவும் மற்றும் 55 கிமீ ஆழத்திற்குள் நிகழும் அதிர்வுகள் “shallow focus quakes” எனவும் அழைக்கப்படும். (Focus என்பது நிலநடுக்கம் ஏற்படும் மையப்புள்ளியாகும். அதேபோல் தரையில் உணரப்படும் நிலநடுக்கத்தில் மையப்புள்ளி Epicentre ஆகும். இதில் shallow focus quakes என்பவையே  அதிக ஆபத்தை உண்டாக்கும். ஏனெனில்அங்கே உண்டாகும் அலைகளில்  விரைவாக தரையை வந்தடையும். மாறாக, Deep focus quakes ன் போது உண்டாகும் அலைகள் (அவை பெரிய அளவில் இருந்தாலும் கூட – எ.கா 8 ரிக்டர் ) தொலைவின் காரணமாக, தரைப்பரப்பை வந்தடையும் முன்னரே வலுவிழந்து விடுகின்றன. ஆயினும் இவை கடற்புற மேலோட்டில் ஏற்பட்டால் அவை சிறிதும் சேதாரமின்றி சுனாமியாக சுத்தம் செய்துவிடும்.

மேலே பார்த்தவற்றுள் “subduction “ (மோதலின் போது அடர்த்தி குறைந்த தட்டு அடர்த்தி அதிகமுள்ள தட்டுக்குக் கீழே சென்றுவிடுவது) என்ற பகுதிதான் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் சூழலாகும். ஏனெனில், மோதி மேலெலும்பும் இவை மென்மேலும் மேலேறவும் அல்லது கீழிறங்கவும் செய்யக்கூடும்‌. இதில் கீழிறங்கும் பகுதி பூமியின் உட்பகுதியை நோக்கிச் செல்வதால் அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருகி அவையே அருகில் துளைகளை ஏற்படுத்தி எரிமலையின் வாய்வழியே “லாவா” வாக வெளியேறுகிறது.

phantom quake
Credit:KTVU

துருக்கி

இந்த சிக்கலான நடுக்கமானது subduction பகுதியில் நடந்தாலும் அவை எத்தகைய ஆழத்தில் ஏற்படுகிறது என இதுவரை கண்டறிய முடியாமல்  தவிக்கின்றன கணிப்பொறிகள். குழப்பம் என்னவெனில் இத்தகைய சிறு நடுக்கங்கள் ஏதேனும் பெரிய யானைக்கான மணியோசையா என்பதுதான். உதாரணமாக 2004 ன்  ஜப்பானில் டோகோஹு வில் பூகம்பம் புறப்படுவதற்கு முன்னர் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டன. மாறாக 2016 ல் நியூசிலாந்தில் கைகோரா பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் அடங்கிய பின்னர் இந்த சிறிய நடுக்கங்கள் உணரப்பட்டன.

50 நாட்கள் நடந்த இந்த சத்யா கிரகம் பிற ஆபத்தான பிரளயம் போலல்லாது சற்று வித்தியாசமானது. ஆண்டுக்கணக்காக  தேங்கி நிற்கும் அழுத்தமானது ஒரு நிமிடத்திற்குள் வெளிப்பட்டிருக்குமாயின் துருக்கியை ஆராய்ச்சி செய்திருக்க முடியாது. இவை, மோதலால் உண்டான அழுத்தத்தை மிக மென்மையாக வெளியிடுகின்றன. இது மோதிக்கொண்ட இரு தட்டுகள் வெள்ளைக்கொடி காட்டி விலகுவதைப் போன்றது.

italy-earthquake
Credit: CBS News

பொதுவாக இந்தவகையான ஜுஜீபி நடுக்கங்கள் நீண்டகாலம் போராட்டம் செய்வது இயல்புதான். உச்சகட்டமாக அலாஸ்காவில் 7.8 அளவில் ஏற்பட்ட இந்த ஜாதி பூச்சாண்டிகள் முழுவதும் அடங்க 9 ஆண்டுகள் ஆயின.

விட்டுக்கொடுக்கா விஞ்ஞானிகள் “ஆக்டிவ் சோன்” எனப்படும் இந்த நிலப்பகுதியில் பலு நூறு சீய்ஸ்மோ மீட்டர் சென்சார்களை மண்ணில் புதைத்தும், செயற்கைக்கோளின் உதவியும் கொண்டு பூமியின் பூகோள மாற்றத்தைத் துல்லியமாக அளவிட காத்துக் கொண்டிருக்கிறார்கள். விடாப்பிடி இயற்கையோ தன் தாளத்தை ரகசியமாக அரங்கேற்றி வருகிறது.  மனிதன் அறிவியலில் எங்கே தோற்று நிற்கிறானோ அங்கேதான் இயற்கைக்கும் நமக்கும் உள்ள இடைவெளி ஆரம்பமாகிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!