தமிழர்களின் உணவு முறையே சற்று மாறுபட்டது. அதற்கு காரணம், ‘உணவே மருந்து… மருந்தே உணவு’ எனும் முறை தான். அது மட்டுமின்றி அறுசுவை உணவுகளை ஒரே நேரத்தில் தமிழர்கள் உண்ணும் முறையை பின்பற்றுகின்றனர். அறுசுவை உணவாக இருப்பினும் மருத்துவ குணம் உள்ளதாகத்தான் தமிழர்கள் உண்ணும் உணவே இருந்தது.
தமிழர்களின் உணவு முறைக்கு காரணம்
உணவே மருந்து என்ற ஒப்பற்ற பழக்கம் நம் உணவு பழக்கத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்கு நம் சங்ககால இலக்கியங்களே சான்று. இதை பற்றி எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை, போன்ற நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சித்தர்கள் உணவு முறை பற்றி குறிப்பிடுகையில், “எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும். எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உனக்கு உணவாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.
Also Read:என்ன சாப்பிட வேண்டும்? அதை எப்போது சாப்பிட வேண்டும்?

பண்டைய தமிழர்களின் உணவு முறைகள்
பண்டைய தமிழர்கள், அவர்கள் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ப உணவு முறைகள் அமைந்துள்ளன.
குறிஞ்சி: கிழங்கு வகைகள், மலையில் விளையும் காய்கறிகள், சில இறைச்சி வகைகள், வரகு, சாமை, திணை, கேழ்வரகு போன்றவையும் உண்டுள்ளனர்.
முல்லை: காட்டு விலங்கின் இறைச்சிகள், காட்டுக் காய்கறிகள், சில நெல் வகைகள், மாம்பழம், வாழைப்பழம் போன்றவை உண்டு வந்துள்ளனர்.
மருதம்: நெல் வகைகள், மரக்கறி வகைகள், ஊறுகாய், பயறு வகைகள் போன்றவை உண்டு வந்துள்ளனர்.
நெய்தல்: நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள், நண்டுக் கறி, மீன் வகைகள் போன்றவை உண்டு வந்துள்ளனர்.
இதில், கடுகு இட்டு காய்கறிகளை தாளிப்பது, பசுவெண்ணையில் பொரிப்பது போன்றவை பண்டைய காலத்திலேயே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
உணவு உண்ணும் முறை
தரையில் சம்மணம் போட்டு வரிசையாக அமர்ந்து உண்ணுவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்தில் முதலில் பெரியவர்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி விட்டு அடுத்து இளைய தலைமுறை சிறுவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு, கடைசியாக வீட்டு பெண்கள் உணவு உண்கின்றனர்.
Also Read: சைவ உணவுப் பழக்கத்தின் தந்தை யார் தெரியுமா ?

உணவு பரிமாறுதல்
முன்பு எல்லோர் வீட்டிலும் வாழை மரங்கள் இருந்தன. அவ்வாறு வாழையிலை உணவு உண்ண பயன்படுத்த துவங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த வாழையிலையில் சூடான உணவு போட்டு சாப்பிடுகையில், குளோரோஃபில் (Chlorophyll) உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டச்சத்தை தருகிறது.
Also Read: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிக்க 10 உணவுகள்!
இது பின்னாளில் தான் கண்டறியப்பட்டது. இந்நாட்களிலும், விருந்துகளிலும் விசேஷங்கள் போன்றவற்றுக்கும் இலையில் போட்டு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம்.
இலையில் கோடுபோட்டது போன்று இருக்கும் அதில் ஒரு பக்கம் காய்கறிகளையும், மற்றொருபுறம் சாதமும் என்று பிரித்து பிரித்து பரிமாறப்படும்.

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் சாப்பிடும் முன் ஒரு நொடிக் குழப்பம் வந்தே தீரும். இலையை எப்படி போடுவது? இலையின் நுனி இடது பக்கமாக வருமா? வலது பக்கம் வருமா? என்று. இதில், இலையின் நுனி சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும். ஏனென்றால், நாம் சாப்பிடும் போது, வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் இலையின் வலது பக்கம் அதிகம் இடம் தேவை.
அதில், உப்பு ஊறுகாய், இனிப்பு எல்லாம் அதிகம் சாப்பிடக்கூடாது எனவே அதை குறுகலான பக்கம் வைக்க வேண்டும். காய்கறி, சாதம் நிறைய சாப்பிடலாம். எனவே அதை இலையின் வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
Also Read: பழங்காலத்தில் தங்கத்தை விடப் புகழ் பெற்றிருந்த உப்பு !!
இவ்வாறு தமிழர்களின் உணவு பழக்கம் உள்ளது. இதை தவிர உணவு பழக்கத்தில் பல நிலைகளை தமிழர்கள் பின்பற்றி வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது.