மட்டன் விரும்பிகள் கவனத்திற்கு!

0
67

புரட்டாசி மாதம் முடிந்து வரும் ஞாயிற்றுக் கிழமை. விரதம் இருந்தவர்கள் எல்லாம் இன்று சிறப்பான அசைவ உணவை உண்டிருப்பீர்கள். நம்மில் வெகுசிலரைத் தவிர அனைவருமே அசைவ விரும்பிகள் தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அசைவ உணவு விருப்பமாக இருக்கும்.  பல வகையான அசைவ உணவுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு விருப்பமானது ஆட்டிறைச்சி தான்.

பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சைவ உணவுகள் சாப்பிட்டால் மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும் எனவும், அசைவம் சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு எனவும் பலர் எண்ணி வருகின்றனர். ஆனால், சிலர் மட்டன் என்றால் விரும்பி வழக்கத்திற்கு அதிகமாகவே ஒரு பிடி பிடிப்பார்கள். இவ்வாறு ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கியமான பல நன்மைகள் கிடைக்கின்றன.

Credit : Chefing Tales

ஆட்டின் தலை, கால், இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை என ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்கு மருத்துவப் பயன் நிறைந்ததாக உள்ளது. ஆட்டிறைச்சியின் ஒவ்வொரு பகுதியும் எத்தகைய மருத்துவ குணம் வாய்ந்தது என்று பார்க்கலாம்.

தலை

ஆட்டின் தலைப் பகுதி நம் எலும்பினை வலுப்படுத்தும். அதனைச் சாப்பிடுவதால் இதயம் சார்ந்த கோளாறுகளும், அதனால் ஏற்படும் வலிகளும் சரியாகும். மேலும், மனிதனின் குடலை வலிமையாக்க ஆட்டின் தலை சிறந்த மருந்தாகும்.

மூளை

ஆட்டின் மூளையைச் சாப்பிடுவது கண்ணுக்குக் குளிர்ச்சி அளித்து கண் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும், உடம்பில் தாதுச் சத்துக்களை அதிகமாக்கவும், மனித மூளை நன்கு வலிமை பெறவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் ஆட்டின் மூளையைச் சாப்பிடலாம்.

ஆட்டுக்கால்கள்

ஆட்டு கால்களை சூப் வைத்துக் குடித்தால், எலும்புகளுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றலும் கிடைக்கும். உடம்பில் ஏற்படும் வலிகள் சரியாகும். இதனால் தான் அடிபட்டு இருப்பவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

மார்பு

ஆட்டின் மார்புப் பகுதி இறைச்சியை உட்கொள்வதால் நெஞ்சுப் பகுதியில் வலிமை கூடும். மேலும், மார்புப் பகுதியில் புண் இருந்தால் அவற்றை குணப்படுத்தும்.

இதயம்

மனித இதயத்திற்கு நல்ல பலம் வர ஆட்டின் இதயத்தை உண்ணலாம். மேலும், இது மன ஆற்றல் அதிகரிக்கவும் சிறந்த மருந்தாக உள்ளது.

நுரையீரல்

ஆட்டின் நுரையீரல் பகுதி இறைச்சி உடலின் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.

சிறுநீரகம்

ஆட்டின் சிறுநீரகத்தை உண்பதனால் இடுப்புக்கும், சிறுநீரகச் சுரப்பிக்கும் நல்ல வலிமை ஏற்படும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது சத்துக்கள் அதிகமாகும். ஆட்டின் கொழுப்பும் இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.

எனவே, சிக்கன் விரும்பிகள் கூட இனி ஆட்டிறைச்சி உண்டு பழகுங்கள்